மணமேடை: மணமகன் தேவை

 பெயர்: A. மலர் M.A., B.Ed
வயது: 36
100% பார்வை இழந்தவர். இந்து பறையர் சாதியைச் சேர்ந்தவர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள பே. பனையன்பட்டி என்ற சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் காலமாகிவிட்டனர்; உடன்பிறந்தோர் இல்லை. தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள  TELC பார்வையற்றோருக்கான நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
திருப்பத்தூர் TELC பார்வையற்றோருக்கான நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்த இவர், தொடர்ந்து +2 வரை சென்னை சிறுமலர் பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்திருக்கிறார். இளங்கலை வரலாறு மதுரை மீனாட்சி கல்லூரியிலும், B.Ed மதுரை ஸ்டீஃபன் கல்லூரியிலும் படித்திருக்கிறார். சென்னை NIVH நிறுவனத்தில் Special B.Ed-உம் முடித்திருக்கிறார். தொலைநிலைக் கல்வியில் M.A முடித்த இவர், கல்லூரிக் காலங்களில் மதுரை IAB நிறுவனத்தில் தங்கியிருக்கிறார். தற்போது இவர் பெறும்  மாத ஊதியம் ரூ. 14000.
இவர் தன்னை ஒத்த வயதுடைய, அரசுப் பணியில் இருக்கும் மணமகனை எதிர்பார்க்கிறார். மணமகன் பார்வையற்றவராகவோ, குறை பார்வையுடையவராகவோ, பார்வை உள்ளவராகவோ இருக்கலாம். எந்தச் சாதியைச் சார்ந்தவராகவும், எந்த மதம் சார்ந்தவராகவும்  இருக்கலாம்.
graphic மலர்

தொடர்புக்கு: muthump2007@gmail.com
தொலைபேசி: 9600116996 (திருமதி. முத்துச்செல்வி)
இவருக்கு ஏற்ற மணமகன் அமைய இதழின் வாழ்த்துகள்.

பின் குறிப்பு:
1. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்களை இணைப்பது மட்டுமே விரல்மொழியரின் நோக்கம்.
2. தங்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அலைபேசி எண் உட்பட தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுகிறது. இதனால் ஏற்படும் அசவுகரியங்களுக்கு விரல்மொழியர் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.
3. இந்தப் பகுதியில் இடம்பெறும் மணமகன்/ மணமகள் பற்றிய விவரங்களைத் தேவைப்படுபவர்கள் கவனமாக சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.
4. மணமகன்/மணமகள் தேவையுள்ளவர்கள் இதழின் முகப்புப் பக்கத்தில் உள்ள மணமேடை இணைப்பின் வழி இணைந்து பயணிக்கலாம்; பயன்பெறலாம்.

1 கருத்து:

  1. இவருக்கு ஏற்ற துணை கிடைக்க வாழ்த்துகிறேன். இதற்காக முயற்சி எடுக்கிற இதழுக்கும் திருமதி முத்துச்செல்வி மேடம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு