விரல்மொழியர் உங்கள் அனைவரிடமிருந்தும் படைப்புகளை எதிர்பார்க்கிறது. தங்கள் படைப்புகள் இதழின் கீழ்க்கண்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு அமைதல் வேண்டும்.
பார்வை மாற்றுத்திறனாளி படைப்பாளிகள் அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், மருத்துவம், புனைவு, பார்வையற்றோர் நலன் என எது குறித்து வேண்டுமானாலும் எழுதலாம். பார்வை மாற்றுத்திறனாளி அல்லாத படைப்பாளிகள் பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பற்றி மட்டுமே இங்கு படைப்புகளைத் தரமுடியும். உங்கள் படைப்புகள் கட்டுரை, கவிதை, சிறுகதை என எந்த வடிவத்திலும் இருக்கலாம்.
படைப்புகளை இதழுக்கு அனுப்பும்போது கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்வது அவசியம்.
- படைப்புகள் ஒருங்குறி (Unicode) வடிவில் தட்டச்சு செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.
- படைப்புகள் ‘Microsoft Word’ கோப்பாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
- படைப்பு கீழ்க்கண்ட அமைப்பில் இருத்தல் நலம்.
*படைப்பின் தலைப்பு
*படைப்பின் வகைமை
*படைப்பின் வகைமை
*படைப்பாளியின் பெயர்
*படைப்பு
*படைப்பாளியின் பணி
*தொடர்பு மின்னஞ்சல்
- தனி நபர்களைப் பற்றியோ, நிகழ்வுகளைப் பற்றியோ எழுதும்போது தொடர்புடைய புகைப்படத்தையும் இணைத்து அனுப்புதல் நலம்.
- படைப்பில் இடம்பெறும் கருத்துகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்பு. இதழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.
- தங்கள் படைப்பினை மெருகேற்ற, அதன் பொருள் மாறாமல் மாற்றி அமைக்கும் உரிமை ஆசிரியர் குழுவுக்கு உண்டு.
- படைப்பின் வெளியீட்டைத் தள்ளிப்போடுவதும், படைப்பை நிராகரிப்பதும் ஆசிரியர் குழுவின் உரிமை.
மேற்கண்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு உங்கள் படைப்புகளைத் தாரீர்.
- படைப்புகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: viralmozhiyar@gmail.com
- மேலும் விவரங்களுக்கு: 9894335053, 9789533964