வெளியானது விரல்மொழியரின் ஆகஸ்ட் 2019 இதழ்

graphic தலையங்கம்: ஆணைகள்+அறிக்கைகள்= அந்நியமாகும் மாற்றுத்திறனாளிகள்:

தலையங்கம்: ஆணைகள்+அறிக்கைகள்= அந்நியமாகும் மாற்றுத்திறனாளிகள்

 பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லாத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் சிறப்புப் பள்ளிகளில் இந்த திட்டமானது முறையாக சென்று சேர்வதில்லை. காரணம் நலத்துறையின் மேம்போக்கான அணுகுமுறை.
***
graphic சந்திப்பு: "பார்வையற்றோர் கூட்டத்தோடு இருக்கும்போது கொஞ்சம் அசௌகரியமாகவே உணர்கிறேன்" திருநங்கை சனா

சந்திப்பு: "பார்வையற்றோர் கூட்டத்தோடு இருக்கும்போது கொஞ்சம் அசௌகரியமாகவே உணர்கிறேன்" திருநங்கை சனா

 பல வித்தியாசமான பார்வையற்ற மனிதர்களை அறிமுகம் செய்துவரும் விரல்மொழியரின் சந்திப்பு பகுதியில் இந்த இதழுக்காக நாம் சந்திக்கவிருப்பது சனா என்கிற  பார்வையற்ற திருநங்கையை. திரு. பாலகணேசன் சனாவுடன் நிகழ்த்திய அலைபேசி உரையாடலை சுவாரசியம் குறையாமல்  வரியாடலாக கொடுக்க முயற்சித்திருக்கிறேன்.
***
graphic கவிதை: கானல் நீர்!

கவிதை: கானல் நீர்

பேசா மடந்தைகள் – இனி பேசித் தான் பழகட்டுமே! தத்தி நடக்கும் செல்ல கிளிகள் – கொஞ்சம் தடைகளை மீறட்டுமே!  வாழப் பிறந்த வண்ணக் குயில் - கதறி விம்மல் கொண்டதுவோ!
***
graphic விவாதம்: அரசியலில் நாம் (5)

விவாதம்: அரசியலில் நாம் (5)

 சென்ற இதழில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பங்காற்றிய பார்வை மாற்றுத்திறனாளியான பேரா. வே. சுகுமாரன் அவர்களைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் தற்கால அரசியல் தொடர்பாகவும், பார்வை மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்கு தொடர்பாகவும் சில கேள்விகளுக்கு அவர் தந்திருக்கும் பதில்களைக் காண்போம்.
***
graphic இலக்கியம்: ஜெயகாந்தனின் சிறுகதை ‘நான் இருக்கிறேன்’ - ஒரு மறுவாசிப்பு

இலக்கியம்: ஜெயகாந்தனின் சிறுகதை ‘நான் இருக்கிறேன்’ - ஒரு மறுவாசிப்பு

 தமிழ் இலக்கிய உலகில் ஜெயகாந்தனுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. இவருடைய புதினங்கள் மற்றும் சிறுகதைகள் பலதரப்பட்ட சமூகச் சிக்கல்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆராய முற்படுகின்றன. உதாரணத்திற்கு இவர் எழுதிய ரிஷிமூலம் என்ற புதினம் ஒரு குடும்பத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையேயான புதுவிதமான அசாதாரணமான உறவைக் குறித்து விளக்குகிறது.
***
graphic அலசல்: வேண்டும் புதிய சிறப்பு தேசியக் கல்விக்கொள்கை:

அலசல்: வேண்டும் புதிய சிறப்பு தேசியக் கல்விக்கொள்கை

 இந்தியாவில் 2 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக அரசே சொல்கிறபோதும், அவர்களுக்கான கல்விகுறித்து வெறும் இரண்டே பக்கங்களில் பேசியிருக்கிறது புதிய தேசிய கல்விக்கொள்கையின் வரைவு. வரைவின் ஆறாவது இயலில் எட்டாவது பிரிவாக சிறப்புத் தேவை குழந்தைகள் (children with special needs) என்ற தலைப்பில், ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற உள்ளடங்கிய கல்வியின் சில அம்சங்களைப் பட்டியலிட்டதோடு தனது கடமையை முடித்துக்கொண்டிருக்கிறது வரைவுக்குழு.
***
graphic சமூகம்: சாதி எனும் சதி

சமூகம்: சாதி எனும் சதி


‘மாணவர்கள் தங்கள் கைகளில் சாதிக் கயிறு கட்டுவதை பள்ளிகள் முழுமையாக தடுக்கவேண்டும்’ என பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை தரப்பட்டுள்ளது. இது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய, நம் அரசின் கொள்கைக்கு உட்பட்ட ஒரு முடிவுதான். இருந்தபோதிலும், இம்முடிவிற்கு ஒரே ஒரு இடத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதுவும் வழக்கமான இடம்தான். அந்த எதிர்ப்புக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும், அமைச்சரின் நடுக்கமும் தான் நம்மை அச்சமடையச் செய்கின்றன.
***
graphic நினைவுகள்: மூன்று நிகழ்வுகளும் கொஞ்சம் நீதிபோதனையும்:

நினைவுகள்: மூன்று நிகழ்வுகளும் கொஞ்சம் நீதிபோதனையும்

 தலைப்பே கட்டுரையின் வடிவத்தை உங்களுக்கு உணர்த்தியிருக்கும். வாருங்கள் முதல் நிகழ்விற்குள் செல்லலாம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை பேருந்து நிற்கும் நடைமேடையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னைத் தடுத்து நிறுத்தி, என்னோட வீட்டுக்காரம்மாவும் பிலையிண்டுதாப்பா. அதனால் பார்வையற்றவர்களைப் பார்த்தால் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன். வாங்க தம்பி இந்த ஹோட்டலில் சாப்பாடு வாங்கித்தருகிறேன் என்றதும், வேண்டாம் என மறுத்தேன்.
***
graphic ராகரதம்( 18) துளிர்க்கும் தாய்மை

ராகரதம்( 18) துளிர்க்கும் தாய்மை

காதலில் பிந்தொடர்தல் என்பதுதான் முதல் அத்தியாயம். அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஒரு ஆண்மகனின் பின்தொடர்தல் என்பது அவன் அவள்மீதுகொண்ட காதலால் உந்தப்பட்டது. கொஞ்சம் அழகும் கம்பீரமுமான ஆண்களின் பின்தொடர்தலில் பல யுவதிகளுக்கு ஒருவகையான ஈர்ப்பும் குறுகுறுப்பும் பிறக்கத்தான் செய்கிறது.
***
graphic சிந்தனை: எது அறிவு?

சிந்தனை: எது அறிவு

 ‘ஆறறிவு உடையவனே மனிதன்’ என்பார்கள். அது தவறு. அதைச் சரியென்று கொண்டால் பார்வையற்றவர்கள் யாரும் மனிதனாக முடியாது.   ஆம். ஆறாம் அறிவு பகுத்தறிவு என்று அறிந்திருக்கும் பலருக்கு மீதமுள்ள 5 அறிவுகள் தெரிவதில்லை.
***
இதழைத் தவறாமலும் தாமதமின்றியும் படிக்க, viralmozhiyar@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்புகொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக