கவிதை: வேளாண்மை (பாடல்)


ம. முத்துக்குமார்

graphic வேளாண்மை தொடர்பான புகைப்படம்
 (பல்லவி)
உணவுக்காக ஓடி ஓடி உளைக்கிறான்.
மனிதன் உழவுத் தொழிலை மட்டும் ஏனோ மறக்கிறான்.

(அனுபல்லவி)
காளம் போகும் போக்கிள் நாமும் மறந்து போனோம் அதனை.
மருந்து மாத்திரைதான் உணவென்றபின் உணருவோம் அதன் பலனை.

(குழுவினர்)
முதலில் வேளாண்மையைக் காப்போம்,
பிறகு வேறு தொழிலைப் பார்ப்போம்.

(சரணம் ஒன்று)
கணினியில் செய்யும் தொழிலை உயர்வாய் மதிக்கின்றான்.
களப்பைப் பிடிக்கும் தொழிலை ஏளனமாய் நினைக்கின்றான்.
மக்கள் பசியைப் போக்கவந்த மனிதக் கடவுள் உழவன்.
உலகில் உள்ள உயிர்கள்க்கெள்ளாம் என்றும் அவனே தலைவன்.

கணினி இல்லாமல் காளத்தைக் கடந்திடலாம்.
விஞ்ஞானம் இல்லாமல் உலகத்தில் வாழ்ந்திடலாம்.
அலைபேசி இல்லாமல் அஞ்சலிள் பேசிடலாம்.
விவசாயம் இள்ளன்னா வேறென்ன செய்திடலாம்??.

(குழுவினர்)
முதலில் வேளாண்மையைக் காப்போம்,
பிறகு வேறு தொழிலைப் பார்ப்போம்.

(சரணம் இரண்டு)
உணவே மருந்துன்னு சொல்லிவச்சான்.
இப்ப மருந்தத்தான் உணவாய் உண்ணவச்சான்.
இயற்கையாய் எதைத்தான் திங்கவச்சான்.
இந்த மனிதப்பய என்னத்தத்தான் விட்டுவச்சான்?‌.

நிலத்திலே வியர்வை சிந்தி உழுதாங்க தீவிரமாய்.
விளை நிலத்தையெல்லாம் மாத்துறாங்க விளைநிலமாய் .
மரத்தையெள்ளாம் அளிச்சா மழை வருமா?.
பிறகு மழை வராமல் போவதற்கு கடவுள்தான் காரணமா?.

(குழுவினர்)
முதலில் வேளாண்மையைக் காப்போம்,
பிறகு வேறு தொழிலைப் பார்ப்போம்.

(சரணம் மூன்று)
முன்னோர்கள் வியர்வை சிந்தி செஞ்சாங்க வேளாண்மை‌
இப்ப எந்திரத்தால் மாறிருச்சு எல்லாமே.
வெயில் படாத வேளை இப்ப ஏசியில.
அதனால பலர் வாழ்க்கை ஓடுது ஊசியில.

உயிர்களுக்கு உணவின்றி ஒன்று வேறேது.
ஆனால் உழவரது வாழ்க்கை போராட்டமாய் மாறுது.
இனி இளைய சமுதாயம் செய்யவேண்டும் விவசாயம்.
இல்லன்னா  உணவின்றி உடலும் உயிரும் மாயும்.

(குழுவினர்)
முதலில் வேளாண்மையைக் காப்போம்,
பிறகு வேறு தொழிலைப் பார்ப்போம்.

(சரணம் நான்கு).
மனிதா இயற்கை தேவை உன் மூச்சுக்கு.
தண்ணீர் தேவை உன் உடலுக்கு.
பாதுகாக்கத் தவறினால் வாங்குவாய் அதைக் காசுக்கு.
அரசாலும் தர முடியாது இதை ஓசிக்கு.

உணவு தேவை உன் உடலுக்கு.
எனவே வேளாண்மையை முதல் தொழிளாக்கு.
உன் உடம்பில் உன் உயிர் இருக்க அதுவே உதவும் உனக்கு.
நீ எந்த வேலை செய்தாலும் இதற்கென ஒரு நேரம் ஒதுக்கு.

(குழுவினர்)
முதலில் வேளாண்மையைக் காப்போம்,
பிறகு வேறு தொழிலைப் பார்ப்போம்.
*****
(கவிஞர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.
இளங்கலை வரலாறு முடித்திருக்கிறார்)
தொடர்புக்கு gmbillakumar@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக