அஞ்சலி: 21ஆம் நூற்றாண்டின் காமராஜர்.


வினோத் சுப்பிரமணியன்
graphic D.K. patel
D.K. படேல்
(ஆகஸ்ட் 29 1931-பிப்ரவரி 10 2020)

2007 கால கட்டத்தில் சென்னை அடையாரில் உள்ள புனித லூயிஸ் பார்வையற்றோருக்கான பள்ளிவலாகத்திற்கு வெளியே ஒரு 76 வயது நிரம்பிய ஒருவர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அது பார்வையற்றோருக்கான பள்ளி என்று தெரிந்ததும் அவர் உள்ளே சென்றிருக்கிறார். அங்கிருந்த அந்தப் பள்ளி தாலாலரிடம் நண்கொடை பற்றி ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார். அவரது உடை தோற்றத்தைப்  பார்த்துவிட்டு அவர் ஏதோ நண்கொடை கேட்க வந்திருக்கிறாரோ என்றூ முதலில் தவறாக நினைத்திருக்கிறார்கள். பிறகுதாண் புரிந்தது அவர் கேட்க வந்தவர் அல்ல. கொடுக்க வந்தவர் என்று.

ஏதோ பார்வையற்றவர்களுக்கு ஒருவேளை உணவு கொடுக்க வந்தவரோ அல்லது ஏதோ ஒரு இசை கருவியை வாங்கிக் கொடுக்கவந்தவரோ அல்ல அவர். பார்வையற்றவர்கள் தங்கி படிப்பதற்காக சுமார் 18,000 சதுர அடிக்கு கட்டடம் கட்டிக் கொடுக்கவந்தவர். அதன் மதிப்பு சுமார் ஒரு கோடிக்கும் மேல் என்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அவர் அத்துடன் நிறுத்தி இருந்தால் இந்தத் தலைப்பை இந்தக் கட்டுரைக்கு சூட்டி இருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவரது தாகம் தணியாததாகவும் தேடல் தீராததாகவும் இருந்திருக்கிறது. அதன் விளைவு, புனித லூயிஸ் பள்ளியில் இருக்கும் மூத்த ஆசிரியர்களிடமும் அந்தப் பள்ளியை நிர்வகித்திருந்த புனித மான்ஃபோட் சகோதரர்களிடமும் ஆலோசனை நடத்தினார் அந்த மனிதர். இல்லை இல்லை. மா மனிதர்.

graphic படேல் அவர் மனைவியுடன்
பார்வையற்றவர்களுக்கு அவர்கள் தனியாக பயில பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு என்று தனியாக கல்லூரிகள் இல்லை. அதை உருவாக்க முதலில் எண்ணியிருக்கிறார் அந்த மாமனிதர். ஒரு பள்ளிவலாகத்தையே கட்ட முடிந்த அந்த மாமனிதருக்கு ஒரு கல்லூரியை கட்டி தருவது என்பது அவ்வளவு பெரிய சவாலாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு சான்றாக மதுரையில் செயல்பட்டுக்கொண்டிருந்த ஐ..பி. பார்வையற்றோர் பள்ளியில் 2012ல் சுமார் 20,000 சதுர அடியில் பார்வையற்றோருக்காக கட்டப்பட்ட கட்டடமும், 2015ல் சுமார் 10,000 சதுர அடியில் கட்டப் பட்ட ஆரணிக்கு அருகில் உள்ள அமலராக்கிணி பார்வையற்றோர் பள்ளிக்கான கட்டடமும்தான்.
ஆனால் அதே போன்று பார்வையற்றோருக்கென்று தனியாக கல்லூரியைக் கட்டினால் பார்வையற்றவர்கள் வெளி உளகத்தை விட்டு தனித்து விடப் படுவார்கள் என்ற கருத்தை அவர்முன் அங்கிருந்தவர்கள் வைக்க அப்படி என்றால் இவர்களுக்கு ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று நினைத்தார் அந்த மா மனிதர். இருதியாக ஒரு முடிவு எடுக்கப் பட்டது. அந்த முடிவு வெரும் முடிவல்ல. அது பார்வையற்றோர்களின் வாழ்வின் இன்னொரு ஆரம்பம்.

graphic படேல் பார்வையற்ற மாணவர்களுடன்
இன்று இந்தியாவில் எங்கெல்லாம் பார்வையற்றோர்கள் தங்களது கல்லூரி படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் ஒரு மனிதரின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. டாஹிலால் கப்புர் சண்ட் பட்டேல். DAHYALAL KAPURCHAND (D.K.) PATEL.
இதுதாண் அவர் முழுப் பெயர் என்று இந்தக் கட்டுரையை எழுதும்வரை கூட எனக்கு தெரியாது. அவரை அனைவரும் டி.கெ. பட்டேல் என்றுதாண் அழைப்போம். அது வெரும் பெயரல்ல. அது ஒரு நேர்மறை அதிர்வலை. அது நம்பிக்கையின் நேரடி பொருள். இன்று கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் அனைத்து பார்வையற்றோர்களுக்கும் வருடத்திற்கு அவர்கள் விடுதியில் தங்கி பயில ரூ 25,000 வரை கல்வி உதவித் தொகையாக கொடுக்கிறார்கள். தவிர விடுதியில் தங்கி பயிலாத பார்வையற்றோர்களுக்கு ரூ 10,000 வரை கொடுக்கப் படுகிறது. அப்படி தானாக முன் வந்து கொடுக்கும் ஒரு தன் ஆர்வ தொண்டு நிருவணத்தின் பெயர் ஹெல்ப் தி பிலைண்ட் ஃபௌண்டேஷன்( Help The Blind Foundation). அதன் நிருவணரின் பெயர்தான் அமரர் திரு. டி.கெ. பட்டேல். யார் யார் பெயரெல்லாம் அந்த தன்னார்வ தொண்டு நிருவணத்தின் செவிகளை சென்று சேர்கிறதோ அவர்கள் பார்வையற்றோர்களாக இருந்தால் உதவி நிச்சயம்.

வெரும் உதவித் தொகை மட்டும் அல்ல. கல்லூரியில் பயிலும் பார்வையற்றோர்களில் சிறந்த மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு இலவச மடி கணினி வழங்கப் படுகிறது. மேலும் அவர்கள் பயில்வதற்கான ஆடியோ ரெக்கார்டர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கப் படுகின்றன. இளங்களைப் படிப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் பார்வைத் திறன் குறையுடையவர்களுக்கு முதுகளைப் படிப்பிற்கும் உதவித் தொகை வழங்கப் படுகிறது. தவிர பல்வேறு கல்லூரிகளில் பார்வையற்றவர்களுக்காகவே தனி கணினி மையங்கள் அமைக்கப்பட்டு கணினிகளும் வாங்க உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

வெரும் கல்வியை மட்டும் கொடுத்துவிட்டால்? அதற்கு பின் அவர்களை வேலைக்கு அமர்த்துவது எப்படி? அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் பார்வையற்றோர்களுக்கு வேலை வாய்ப்பு மிகவும் குறைவு. அரசாங்கம் மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவு இடங்களை அவர்களுக்காக ஒதுக்குகிறது. மீதம் இருப்பவர்களை எப்படியாவது வேலையில் அமர்த்திவிடவேண்டும் என்ற உறுதியை கொண்டுள்ள இந்த தன்னார்வ தொண்டு நிருவணம் அவர்களுக்கான பயிற்சியையும் நடத்திவருகிறது. வங்கிகளில் வருடந்தோறும் நடத்தப் படும் தகுதி தேர்வுகளுக்கும், தனியார் நிருவணங்களில் அவர்கள் சேர்ந்து பணி புரிய தேவையான ஆங்கில புலமை, கணினி திறன், ஆளுமைத் திறன் போன்ற அனைத்து பயிற்சி வகுப்புகளையும் நடத்த தொடங்கியிருக்கிறது இந்த நிருவணம். அதில் பயிற்சி பெறும் அனைத்து பார்வையற்றோர்களுக்கும் கட்டணம் இலவசம். அப்படி வந்து இந்த பார்வையற்ற பட்டதாரிகளுக்கு வகுப்பு எடுப்பவர்களுக்கு அந்த நிருவணமே கட்டணத்தையும் கட்டிவிடுகிறது. அதற்காகவே சில லட்சங்களை செலவு செய்கிறார்கள்.

இவை அனைத்திற்கும் அஸ்திவாரம் போட்டவர் அந்த நிருவணத்தின் நிருவணர் திரு டி.கே. பட்டேல். ஆகஸ்டு 29 1932ல் பிறந்து மும்பையில் கல்லூரி படிப்பை முடித்து ஹாங்காங்கில் இருக்கும் வங்கிகளிலும் மிகப் பெரிய வணிக நிருவணங்களிலும் 50 அண்டுகளாக பணி செய்து ஓய்வு பெற்றவர்தாண் இந்த மா மனிதர். வெரும் 12 ஆண்டுகளிலேயே ஒரு சகாப்தத்தை நிருவி விட்டிருக்கிறார். பொதுவாக உதவித் தொகை வழங்குபவர்கள் அதைப் பெறுபவர்களிடம் ஒரு இடைவெளியை கடைபிடிப்பர். அதை சற்றும் செய்யாதவர்தாண் இவர். தன்னால் உதவி பெறப் பட்ட பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களிடம் மிகவும் நட்புடனும் அன்புடனும் எளிமையுடனும் பழகிவந்தவர். அவர்களின் திறமையை தானாகவே கண்டறிந்து அதை உளகுக்கு அறிமுகப் படுத்தவும் அந்த மா மனிதர் தவறவில்லை.

ஆனால் அவர் தவறிவிட்டார். கண் பார்வையற்றோருக்கு கல்வியின் மூலம் கண் கொடுத்தவர் தன் கண்களை கடந்த ஃபிப்ரவரி 10 2020ல் மூடிக்கொண்டார். இவர் இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாம். அல்லது எங்கள் வாழ்வில் இன்னும் சீக்கிரம் வந்திருக்கலாம் என்பது ஒட்டுமொத்த பார்வையற்றோரின் குறளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஒருமுறை அந்த நிருவணத்தைச் சேர்ந்த ஒருவர், உதவித் தொகை வழங்குவதில் சில நேரங்களில் தவறுகள் நடந்துவிடுகின்றன என்று ஒரு ஆண்டு இருதி கூட்டத்தில் சொல்ல, அங்கு அமர்ந்திருந்த திரு டி.கே. பட்டேல், அப்படி தவறுகள் நடக்குமாயின் அது பார்வையற்றோர்களுக்கு சாதகமான தவறாக இருக்கட்டும் என்றார் உடனே. அப்படிப் பட்ட மா மனிதரைத் தான் இழந்து நிற்கிறது இந்த பார்வைத் திறன் குறையுடைய சமுதாயம் இன்று. அவர்களைப் பொருத்தவரையில் இவர்தான் 21ம் நூற்றாண்டின் காமராஜர்.

(கட்டுரையாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுகிறார்).
தொடர்புக்கு: slvinoth91@gmail.com
வலை தளம்: www.slvinoth.blogspot.com

1 கருத்து:

  1. நவீன காமராஜர் குறித்த கருத்துக்களுக்கு நன்றி.. d.k. patel. Vanakkam Parvati eppadi seiya vendum endru eppadi vanthathu.பார்வையற்றோருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஐயா அவர்களுக்கு எப்படி ஏற்பட்டது என்ற தகவலை அளித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.. பார்வையற்றோர் மீதான தவறு என்றால் அவர்களுக்கு சாதகமான தவறு என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்று தெய்வீக குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் உண்மையிலேயே போற்றத்தக்க மனிதர் மாமனிதர் இக்கட்டுரையை வழங்கிய கட்டுரை ஆசிரியருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு