சமூகம்: உலக அரசிகளே!


பார்வையற்ற பெண்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் என்ற எனது போன வருட பதிவை தொடர்ந்து இந்த வருடமும் பார்வையற்ற பெண்கள் தம் சுயத்தை சீர்தூக்குவது எப்படி? என்பது குறித்த இந்த பதிவு பெண்கள் குறிப்பாக என் பார்வை சவால் கொண்ட பெண்களுக்கு பயனுறும் என நம்புகிறேன்.

பெண்கள் ஆண்களை விட மனதால் வளிமை கொண்டவர்கள், உடலால் வளிமை குன்றியவர்கள் என்பது பொதுவான கூற்று. ஆனால் பெண்கள் உடலாலும், மனத்தாலும் வளிமை மிக்கவர்கள் என்பது எனது கூற்று.  

ஆணும் பெண்ணுமாக வாழும் இந்த சமுதாயத்தில் பெண்களை மட்டும் ஆணை சார்ந்து பின் தொடர்ந்து வாழ்பவளாக கட்டமைத்துள்ளது நமது கலாச்சார வாதிகள் நிறைந்த இந்த சமுதாயம். அதன் வழியே பெண் அச்சம், ஞானம், பயற்ப்பு, மடமை  போன்ற நான்கு சுவர்களுக்குள் வளர்க்கப்படுகிறாள்.  ஒவ்வொரு பெண்ணும் தன் அனுபவங்களால் மன வளர்ச்சி அடையும் முன்னரே உடலால் வளர்ச்சியடைந்து பின் தான் சார்ந்து வாழ்பவர்களுக்கு ஏற்றார் போல் தன்னை  பக்குவப்படுத்திகொள்கிறாள்.

தன் உடல் அவளது சுயம் என உணர்த்த மறுக்கும் பெற்றோர் ஒரு பெண்ணின் உடல் அவளுக்கு தொடர்புடைய ஆணுக்கு உறியது என கற்பிக்கின்றனர். என்பதால் தான் இதுநாள் வரை பெண் என்பவளை வெறும் போதை பொருளாகவே கருத்தி அடிமையாக்கி ஆளுகின்றனர். அப்படியிருக்க, பார்வையற்ற பெண்களது நிலை குறித்த பயமும் ஆழ்ந்த சிந்தனையும் நமக்கு ஏற்படவே செய்கிறது. புரிதலும்விழிப்புணர்வும் பார்வையற்ற பெண்களுக்கு முதலில் உண்டாகிட வேண்டும். என் உடலும் மனமும் என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் உணருதல் மிக முக்கிமான ஒன்று. எந்த பெண் தன் உடலை கவர்ச்சி பொருளாக பயன்படுத்த நினைக்கிறாளோ? அவள் தன்னை இழக்க தயாராகிறாள் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை.

நமது தலைநகரத்தையே ஏன்? இந்தியாவையே ஈளுக்கிய சம்பவம் நிர்பையா கொலை. இதன் முதற் காரணம் ஒரு ஆடவனுடன் அப்பெண் சகஜமாக நெருங்கி பழகியதே. அது தான் அங்கிருந்த நிர்பையாவை தவறாக நினைக்க தூண்டியது. இதுபோன்ற சம்பவங்கள் நம்மை ஆத்திரப்படுத்தும் முன் நம்மீதான சில தவறுகளை நாம் திருத்திக்கொள்ள வழி வகுக்க வேண்டும்.

சற்று வறளாற்றின் சில பக்கங்களை இங்கு புரட்ட வேண்டியுள்ளது
கேரலாவில் உள்ள திருவாங்கூர் அதாவது இன்றைய திருவணந்தபுரத்தில் பெண்கள் தங்கக்ள் உடலை அதாவது மேல் உடலை மறைக்க கூடாது. அப்படி மறைக்க வேண்டுமாயின் மார்பு வரி என்று ஒன்றை செலுத்திட வேண்டும். இது சாதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொடுரம். அப்படி மார்பை மறைக்க மறுக்கும் பெண்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. அதேபோல இடுப்பிலிருந்து முட்டி வரைக்கும் மட்டுமே பெண்கள் சேலை அணிய வேண்டும். அவர்கள் வயல்களில் குணிந்து வேளை பார்க்கும்போது அவர்களது சேலை முழங்காலை தொட்டால் கூட பின்னால் நிற்க்கும் வேலையாலோ நாட்டாமை என்னும் ஜம்மீன்தாரோ பெண்ணை தடியால் அடிப்பார்கள். அப்படியிருந்த அன்றைய கால சூழலில் தன் சுயத்தை வெறும் சாதி என்ற பெயரில் இந்த முதலாளி மிருகங்கள் சூறையாடுவது உணர்ந்த ஒரு பெண், மேலாடை உடுத்த அதை தடுக்க வந்தவரிடம் என் சுயத்தை இழப்பதை விட என் மார்புகளை இழக்கிறேன் என கூறி தன் மார்பகங்களை வெட்டி எறிந்தாள்.
இதற்கு பின்னரே வைக்கம் போர் உருவானது என்பது கூடுதல் தகவல்.

அப்படியிருக்க இன்றைய பெண்கள், தங்களைதங்கள் சுயத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். தங்கள் பதின் பருவத்தில் ஏற்படும் சில ஆர்மொண்களது  மாற்றத்தால் எளிதில் தன் சுயத்தை இழப்பதை அதிகம் காணமுடிகிறது.. பார்வை சவால் கொண்ட பெண்கள் இவ்வாறான விடையங்களில் அதிகம் சிக்கி சீர்ரழிவதாக பல கருத்துக்கள் வளம் வருகிறது.

பார்வை சவால் கொண்ட பெண்கள் ஆலுமையிலும் சற்று தங்களை மேம்படுத்திக்கொள்வது மிக அவசியமாகிறது. பேச்சு, செய்கை போன்றவற்றில் பா சாவால் கொண்ட பெண்கள் தங்களை மற்றவர்களிடம் மேன்மையாக பிரதிபலித்துக்கொள்ள வேண்டும்.

எனக்கு தெரிந்து பல  பெண்கள் காதல் என்ற பெயரில் தன்னை இழப்பது இங்கு அதிகம். அதுவும் பள்ளியை விட்டு வெளி வந்த காலகட்டங்களில் இதுபோன்று ஏமாற்றப்படுவதுவும் ஏமாறுவதுவும் மிக அதிகம்.  பெண்கள் தங்களிடம் பேசும் ஆண்களிடம் தங்கள் வருத்தங்களையும் சோகங்களையும் பகிர்வது இயல்பு ஆனால் அதை பயன்படுத்தி கொள்ளும் ஆண்கள் பெண்களை வலைக்க முற்படுவதை பார்வையற்ற பெண்கள் உற்றுநோக்கி உணர்தல் சால சிறந்தது. வந்த பின் அழுவதை விட வரும் முன் தன்னை காத்துக்கொள்வது புத்திசூலி தனம்
தான் எந்த நோக்கத்தால் பிறரார் பார்க்கப்படுகிறோம் என்பதை பார்வையற்ற பெண்கள் உணர்ந்து நடப்பது அவசியம்.

பார்வையற்ற பெண்கள் தங்களது சுயத்தை மேம்படுத்திட அதிகம்  வெளி உலகு குறித்து தெரிந்துக்கொள்வது தேவை. புத்தகங்கள் வாசிப்பது அவசியமாகிறது.
அருமினா சின்கா என்ற விலையாட்டு வீராங்கனை ரயிலெல் பயணிக்கும்போது பல கொல்லைக்காரர்களால் சீரழிக்கப்பட்டு ரயிலிலிருந்து கீழே தள்ளிவிடப்படுகிறாள். விழுந்தவளுக்கு ஒரு கால் துண்டிக்கப்படுகிறது. காப்பாற்ற எவரும் வராத சூழலில் விடியற்காலை விபத்தில் சிக்கியவள் மறுநாள் மாலை வரை வலியோடும் ரத்த வாசனைக்கு வந்த விலங்குகளோடும் போராடிக் கொண்டிருந்தாள். தன்னை காப்பாற்றிக்கொள்ள ரயில் தண்டவாலத்தை கடக்க முயன்றவள் மீண்டும் ஒரு ரயிலில் அடிபட்டு மறு காலும் சேதமடைகிறது

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிறகும் கூட அவளுக்கு அறுவைசிகிச்சை செய்ய தேவையான  மயக்க மறுந்து இல்லை.
உனக்கு இன்று அறுவைசிகிச்சை செய்தாக வேண்டும் இல்லாவிட்டால் இரண்டு கால்களையும் இழக்க நேரிடும் என கூறியதன் பொறுட்டு
அருமினா கூறியது, நீங்கள் காப்பாற்றும் வரை வலியை பொறுத்துக்கொண்ட நான் அறுவை சிகிச்சையினால் ஏற்படும் வலியை பொறுத்துக்கொள்ள முடியும் எனக்கு ஒரு காலாவது வேண்டும் தொடங்குங்கள் அறுவைசிகிச்சையை என்று மயக்கமருந்து இல்லாமளே அறுவை சிகிச்சை செய்துக்கொண்டாள்.
பின் மூன்றே மாதத்தில் எவரஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தாள்.
அவளது மன உறுதியும் விடா முயற்ச்சியூம் பார்வையற்ற நமக்கு தேவை. மன உறுதியும் தன் நம்பிக்கையும் மட்டுமே நம்மை உரிய பாதையில் வழிநடத்தி செல்லும்.

காதலித்த பெண்ணை தவறாக படம் பிடித்து வைத்துக்கொண்டு மிறட்டுவது, பெற்றோரை மிறட்டுவது போன்ற அநாகரீக காரியங்கள் நம் பார்வையற்ற  சமுதாயத்திலும் பெருகி வருவதை காண முடிகிறது.
தன் சுயத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கும் பெண்கள் கட்டாயம் எவரையும் எளிதில் நம்புவதை நிறித்தி கொண்டு சற்று சந்தேக பார்வையும் அவசியம் என தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
தன் வாழ்க்கை தகவல்களை எவரிடமும் பகிரும் முன் அவர் நம் நம்பிக்கைக்கு உரியவரா என தீர ஆய்வு செய்து பின் பகிர்வது அவசியம்.

தன் ஆடை அலங்காரங்கள் தன்னை ஒரு சிறந்த ஆளுமை என பிரதிபலிப்பதாக அமைதல் வேண்டுமேயன்ஸ்ரறி இவள் என் தேவைக்கு உகந்தவள் என்ற எண்ணத்தை விதைப்பதாக இருத்தல் கூடாது.
கவர்ச்சியை நோக்கமாக கொண்டு ஆடை அணிவது நமது சுயத்தை நாமாகவெ இழக்கிறோம் என பெண்கள் உணர்தல் வேண்டும்

நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும் திமிர்ந்த  ஞான செறுக்கும் பெண்ணுக்கு தேவை.
அதைவிடுத்து நானுதலும் கோனுதலும் வார்த்தையில் தடுமாற்றமும் பெண்ணை பலவீனமானவளாக பிரதிபலிக்கும்.
சமிபத்தில் குஜராத்தில் ஆசிரியர் இருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பார்வையற்ற குழந்தை பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடுமை கூறி ஆசிரியர்களை கைது செய்ய வைத்தது. இதுபோன்று பெண்களும் குழந்தைகளும் தைரியம் தற்காப்பு போன்ற கலைகளை வளர்த்து கொள்வது அவசிமாகிறது.

பார்வையற்றவர் பொறுத்த வரை குரல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது குரலில் நாம் காட்டும் ஏற்றதாழ்வுகளும் பேசும் விதங்களும் நம்மை, நம் குணத்தை மற்றவர் அறிய செய்கிறது.
எனவெ பார்வையற்ற பெண்கள் தம் எதிர்காலத்தை சிறந்த முறையில் சிறப்பாக அமைத்துக்கொள்ள  தன்னை சீரிய முறையில் வளர்த்தெடுக்க பல கலைகள் கற்று தேர வேண்டியது இங்கு அவசியமாகிறது.
இது பார்வையற்ற பெண்களுக்கான தேவையும்  கூட.

                 வளமான வாழ்வும் வரளாற்றில் நம் பெயரும் இடம் பெற வேண்டுமாயின் மன கட்டுபாடும் மன வளிமையும் தேவை,
ஒவ்வொரு பார்வையற்ற பெண்ணும் இவ்வுலகின் அரசிகள்  அவர்கள் வீழ்வதும் வாழ்வதும் அவர்கள் கையில்.
சுயத்தை இழந்து பெறும் நீடிப்பதில்லை. அதற்காக தலைகனமும் தேவையில்லை. அச்சம் ஒரு மனிதனை கோழையாகவும் சில நேரங்களில் மனிதனாகவும் வாழ வழி வகுக்கிறது.

பெண்கள் பெரியாரை படிப்பது இங்கு அவசியம் அவர் வழி நடப்பது சிறப்பு. எப்பொருளாயின் மெய்பொருளா என எண்ணுவது அவசியம். எங்கு தேவையோ அங்கு கோவத்தையும் எங்கு தேவையோ அங்கு அன்பையும் காட்டுங்கள்.
எவரையும் முழுவதும் நம்பவும் வேண்டாம் முழுவதும் வெறுக்கவும் வேண்டாம். எவரையும் அனுமானிக்க நாம் மகாத்மாக்கள் அல்ல.
          நன்றிகளுடன்
     சோபியா மாலதி
கட்டுரையாளர் தஞ்சை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்
தொடர்புக்கு: sophiamalathi77@gmail.com
செல்பேசி: 9629495808

3 கருத்துகள்:

  1. உங்கள் வழக்கமான எழுத்து நடையில் இல்லை.
    மேலும் இக்கட்டுரையில் குறைகள் ஆங்காங்கே இருக்கின்றன.
    நான் தவறாக ஏதேனும் கூறியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு


  2. பார்வையற்ற பெண்களின் நிலை உணர்ந்து
    வஞ்சகர்களின் எண்ணத்தை முறியடிப்பதற்காக தங்களின் கருத்துக்கள்
    பல பார்வையற்ற பெண்களுக்கு ஊக்கமாய் அமையும் என்று நம்புகிறேன்..

    பதிலளிநீக்கு
  3. இது எல்லா பெண்களுக்கும் பொருந்துகிற கருத்துக்கள் நிறைந்த கட்டுறை.

    பதிலளிநீக்கு