உலகம்: வரலாற்றின் கருப்பு தினம்...!!

சோஃபியா 
மனிதனின் நாகரீகம் வளர வளர அவனது பேராசையும் வளரத்தான் துவங்குகிறது. அதன் விளைவே 1500 உயிர்கள் பலி ஆன இந்த கோர விபத்து. ஆம் இதோ உலக வரலாற்றையே உளுக்கிய சம்பவம் டைட்டானிக்.
graphic இரண்டு பாகங்களாக உடைந்த டைட்டானிக் கப்பல்

டைட்டானிக் என்றதும் நமக்கு நினைவிற்க்கு வருவது பிரம்மாண்டமான கப்பல் கடலில் மூழ்கியதும். அதில் ஒரு காதல் ஜோடி தப்பிக்க முயன்று தங்கள் காதலை பரிமாரிக்கொள்வதும் தான். ஆனால் அதையும் தாண்டி டைட்டானிக்கின் பல உண்மைகளை பேசுகிறது இந்த கட்டுரை.

 இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு தன் பயணத்தை 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கிட்டத்தட்ட  1500க்கும் மேல். நடுத்தர மற்றும் பணக்கார  வர்க்கத்தை சேர்ந்த பயணிகளோடு இங்கிலாந்தின் சதாப்டன் துறைமுகத்திலிருந்து துவக்கியது டைட்டானிக். தன்னை எவராலும் மூழ்கடிக்க முடியாது என்ற தலைக்கனத்துடன் தலைநிமிர்ந்து புரப்பட்ட அந்த கப்பல், தான் புறப்பட்ட 4 நாட்களிலேயே தன்னை மூழ்கடித்துக்கொள்ளவும் செய்தது. அதன் கோரப்பசிக்கு பலியானோரது எண்ணிக்கை சுமார் 1200 பேர் என்கிறது தகவல்கள். சரி டைட்டானிக்கின் கதை தான் என்ன

 அமெரிக்காவை சேர்ந்த ஜெ.பி மார்கன் என்பவர் ஒயிட் ஸ்டார் லைன் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தை நடத்தி வந்தார். அவர் மாபெரும் செலவில் மூன்று கப்பல்களை கட்டிக்கொண்டிருந்தார். அவை ஒலிம்பிக். 1908.லும் டைடானிக் 7.5 மில்லியன் செலவில் 1909.லும் மற்றும் பிராட்டானிக் 1911.லும் கட்டி வந்தார். இவரது ஒலிம்பிக் தன் முதல் பயணத்தை 1911.ல் செப்டம்பர் மாதம்    துவங்கியது ஆனால் இந்த கப்பல் எச்.எம்.எஸ் ஹாக் என்ற போர் கப்பல் மீது மோதியதால் தனது இடது புரத்தில் பலத்த சேதத்தை அடைய நேர்ந்தது. அதை சரி செய்யவே ஒரு லட்சத்தி எழுபத்து ஐந்தாயிரம் டாலர்கள் தேவைப்பட்டது. இதை கேட்டு அச்சமுற்ற மார்கன் தன் பணம் அடுத்தடுத்த கப்பல்களில் முடங்கி கிடப்பதை  எண்ணி அச்சமுற்றார். 
  அதையடுத்து தனது கனவை நினைவாக்கிட தனது அசுறத்தனத்தை அறங்கேற்றிட திட்டமிட்டார் மார்கன்.
 
graphic டைட்டானிக் கப்பலுடன் மார்க்கன்

மார்கனது சதி திட்டம் இங்கே அழகாக பிரசுவிக்கப்பட்டது. ஆம். ஒலிம்பிக் மற்றும் டைட்டானிக் இரு கப்பலுக்கும் பெரியதாக எந்தவித வேறுபாடும் இல்லாமல்தான் மார்கன் கட்டிக்கொண்டிருந்தார். அச்சமையம் ஒலிம்பிக் தான் விபத்திற்கு காரணம் என்பதால் இன்சுரன்ஸ் கம்பெனியும் மார்கனுக்கு கைவிரித்து விட்டது. இந்த சூழலில் மார்கன் தன்னிடமிருந்த பணத்தை கொண்டு ஒலிம்பிக்கை சீரமைத்தார். ஒரு புதிய டைடானிக்காக ஒலிம்பிக்கை உருப்பெற செய்தார். அந்நேரம் நிஜ டைட்டானிக் கட்டி முடிக்க அவரிடம் பணம் இல்லை என்பதே நிஜம். ஏற்கனவெ சிதைந்த ஒலிம்பிக்கை மீண்டும் சிதைக்க முன் வந்தார் மார்கன். அதன் மூலம் தனக்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டு தொகையை பெற்றிடலாம் என்பது அவரது கனவாயிருந்தது. கப்பலானது ஐஸ் பாறையில் மோதினால் கப்பல் மூழ்காது எனவெ காப்பீட்டு தொகையை வாங்கி கப்பலை மீண்டும் சரி செய்திடலாம் என்ற கற்பனை ஓட்டத்தில் மிதந்தார் மார்கன்.  

 இன்சுரன்ஸ் வாங்க ஒரு புதிய விளையாட்டை ஆட துவங்கியிருந்தார் மார்கன். டைட்டானிக் எவராலும் மூழ்கடிக்கப்பட முடியாத கப்பல். பணக்காரர்களது சொகுசு கப்பல் என்ற ஆளுமையோடு கடலில் அசுறத்தனமாய் புறப்பட்டது ஒலிம்பிக்.
  முன்பு கேப்டனாக வந்த அதே கேப்டன் இம்முறையும் டைட்டானிக் என்னும் ஒலிம்பிக்கை நடத்துகிறார். ஆறு முறை ஐஸ் பாறை இருப்பதாக அறிவிப்புகள் வந்த பிறகும் அதை குறித்து சற்றும் கண்டுகொள்ளாத போக்கு  போன்றவைகள் இது ஒரு திட்டமிட்ட விபத்து என்று தான் நம்மை யோசிக்க வைக்கிறது. 

 கடலில் மூழ்கிய பின் டைட்டானிக் என்ற பெயரில் அந்த கப்பலுக்காக ரூபாய் 10. மில்லியன் டாலர் காப்பீட்டு தொகையாக லண்டனை சேர்ந்த லாயிக் என்ற வங்கி  வழங்கியதாக அறியப்படுகிறது.  இது வரலாற்றில் பதியப்படாத இன்சூரன்ஸ் விளையாட்டு என்றே கூறலாம்.

 டைட்டானிக் எப்ரல் மாதம் 14 அம் தேதி இரவு 11.40 மணியளவில் வட அட்லாண்டிக் கடலில்  220 அடி நிலம்  உள்ள பணிப்பாறையில் மோதியது. மறுநாள் விடியர் காலை 2.20 மணியளவில் முற்றிலுமாக இரு துண்டுகளாக உடைந்து  மூழ்கியது. அழுகை புலம்பல் கதறல் ஓலம் என்ற அனைத்தையும் கேட்ட டைட்டானிக் சுமார் 12415 அடி ஆழத்தில் தூங்கிகொண்டிருக்கின்றது. இதன் மிச்சங்கள்  இன்னும் 14 ஆண்டுகளில் ஆலோ மோனாஸ் என்ற பாக்டீரியாவால் முற்றிலுமாக அழிந்தே போகும் என்பது ஆராய்ச்சியாளர்களது கணிப்பு. 

 1985 ஆம் ஆண்டு ராபர்ட் பள்ளார்ட் என்ற ஆராய்ச்சியாளர் வேரு இரு மூழ்கிப்போன கப்பல்கள் குறித்து ஆராய சென்ற போது டைட்டானிக்கின் இதர பாகங்களை கண்டு ஆராய துவங்கினார். டைட்டானிக்கிலிருந்து வெரும் 711 பெண்கள் மற்றும் குழந்தைகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. ஒருநாளைக்கு 600 டன் நிலக்கரி எரிக்கப்பட்டதாகவும் 100 டன் சாம்பல் கடலில் கொட்டப்பட்டதாகவும் சில தகவல்கள் உண்டு. 
டைடானிக் உடைந்தபோது இரு துண்டுகளுக்கும் இடையெ 2000 அடி இடைவெளி இருந்ததாகவும் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

 கப்பலிலிருந்து உயிர் பிழைத்த ராபின் கார்டின்னர் என்பவர், டைட்டானிக் கான்ஸ்பிரசி என்ற புத்தகத்தின் வாயிலாக பல உண்மைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டார். அவை:

டைட்டானிக்கில் 16 boat holes இருக்கும் ஆனால் மூழ்கிய கப்பலில் 11 boat holes மட்டுமே இருந்துள்ளது.
 டைடானிக்கில் ஒரே அளவிலான பெரிய ஜன்னல்கள் இருக்கும் ஆனால் மூழ்கிய கப்பலில் சிறிய ஜன்னல்கள் வெவ்வேறு அளவுகளில் ஒலிம்பிக்கில் இருப்பதை போல இருந்துள்ளது.
 மார்கன் இறுதிக்கட்டத்தில் உடல்நிலை குறைவு என்ற காரணத்தால் தனது பயணத்தை நிறுத்தியுள்ளார். அவரது சொந்தம் பந்தம் நட்பு அனைவரும் தங்கள் பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளனர். 
 இது அனைத்துமே டைட்டானிக் தானாக மூழ்கவில்லை மூழ்கடிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது.
 இதைத் தொடர்ந்து டைட்டானிக் விபத்திற்கு மற்றொரு காரணத்தையும் சித்தரித்துள்ளது நமது சமுகம். ஆம் சற்றே நாமும் எகிப்திற்கு போவோம் வாருங்கள்.

      டைட்டானிக் சம்பவத்திற்கு  சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு எகிப்தில் ஆட்சியில் இருந்து மறைந்த ராணியின் புதைக்கப்பட்ட உடல் (மம்மி)  நான்கு  அகழ்வு அராய்ச்சியாலர்களால்  ஆராயப்பட்டது.  தங்களின் சுயநல பேராசையின் காரணமாக அந்த உடலை சீரிய முறையில் கையாலாமல்  பாதி உடலை விட்டு மீதியை தங்களோடு கொண்டு வருகின்றனர் அவர்கள். ஆனால் அந்த நான்கு நண்பர்களும் அடுத்தடுத்து இறந்துபோகின்றனர்.

 அதையடுத்து நான்கு நண்பர்களுள் ஒருவரது குடும்பத்தினர் தங்களிடமிருந்த அந்த உடலை இங்கிலாந்து அருங்காட்சியகத்திற்கு கொடுத்து விடுகின்றனர். அதையடுத்து அந்த அருங்காட்சியகத்தில் சில பணியாளர்கள் மர்மமாக இறந்தும் போகின்றனர்.
 பின்பு அந்த உடல் இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா அருங்காட்சியகத்திற்கு R.M.S. TAITANIC மூலமாக   அனுப்பி வைக்கப்படுகிறது. R.M.S என்பது ராயல் மெயில் சர்விஸ் என்பது பொருள். ஆக  டைட்டானிக் மெயில்களை சுமந்து செல்லும் கப்பலாகவும் இருந்திருக்கின்றன. அந்த உடல் டைட்டானிக்கில் ஏற்றியதன் விளைவே  விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற கருத்தும் இணையத்தில் வளம்வந்துகொண்டு தான் இருக்கின்றது.  ஆனால் இங்கிலாந்து அரசு அந்த உடல் தங்களிடம் இருப்பதாகவும் அமெரிக்காவிற்கு அனுப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆக இன்றளவும் டைட்டானிக் தன்னை ஒரு மர்ம கதையாகவே ஒளித்துக்கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.

 மிதக்கும் சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட டைட்டானிக் தனக்குள்  28 நாடுகளைச் சேர்ந்த 1296 பயணிகளை சுமந்து பயணத்தை துவங்கியது. அதில் 416 பெண்களையும்,   768 ஆண்களையும், 112 குழந்தைகளையும், 13 தேன்நிலவு தம்பதியினரையும், 918 கப்பல் ஊழியர்களையும்,  அவர்களுள் 23 பெண் பொறியாளர்களும் 28 ஆண் பொறியாளர்களும் 7 தட்டச்சாளர்களும் பயணித்தனர்.
 மூழ்கடிக்கப்பட முடியாத கப்பலில் வெறும் 100க்கும் குறைவான பாதுகாப்பு படகுகள் இருந்தன என்றும் அதில் பெரும்பாலும் பணக்கார பெண்களும் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர். மீதியிருந்த அத்தனைபேரையும் மிதக்கும் சொர்க்கம் விழுங்கி அமைதியாய் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது.

 ஆக, டைட்டானிக் இன்றளவும் மர்மத்தின் பிடியில் கிடைத்த ரகசியமாகவே தன்னை புதைத்துக்கொண்டுள்ளது என்பதுதான் நிதர்சனம்.
 பயணம் மனிதனின் அனுபவம். ஒரு மனிதன் 10000 மைல்கள் பயணிக்க வேண்டும் என்பது மூதாதையர் வாக்கு. பல சாதனைகளையும் சோதனைகளையும் பயணங்களே தீர்மானிக்கின்றன. ஆனால் டைடானிக்கின் முதல் பயணமே அதன் இறுதி பயணமாகி போனது கொடுமை. இது இன்றளவும் கனிக்க முடியாத விடயம் காண முடியாத விடுகதையாகவே உள்ளது. 

 டைடானிக் மலைப்பின் பிரதேசம் மர்மத்தின் மறு உருவம்....!
       ரகசியத்தின் சோக ராகம். 
தொடர்புக்கு sophiamalathi77@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக