இலக்கியம்: தமிழ் எழுத்துலகின் ஏலியன் 


graphic எழுத்தாளர் சுஜாத்தா

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பழுதடைந்துவிடுகிறது. நாட்டுக்கு சேவை செய்யும் தன்நல ஆர்வத்துடன், தன் மனைவியை பிரிந்து,அந்தப் பழுதை சரிசெய்வதற்காக விண்ணுக்குச் செல்கிறான் இளம் விஞ்ஞானி ஒருவன். செயற்கைக்கோளின் பழுதை வெற்றிகரமாக சரிசெய்துவிடுகிறான். அவ்வேளையில்,அவன் சென்ற விண்கலம் செயல் இழந்து விடுகிறது. அவனை காப்பாற்ற வேண்டுமானால், கோடிகளை செலவு செய்து, ஒரு விண்கலத்தை அனுப்பவேண்டும். ஆனால், அரசு அவனை தியாகி என்று அறிவித்துகைவிட்டுவிடுகிறது.

நான் கனினியில் திரை வாசிப்பான் கொண்டு தமிழ் வாசிக்க பழகிய காலகட்டத்தில் படித்த என்னால் இன்றும் மறக்க முடியாத ஒரு விஞ்ஞான சிறுகதையின் கருதான் மேலே நான் குறிப்பிட்டு இருப்பது. அதை எழுதியவர் வேரு யார் சாட்சாத் ஆசான் சுஜாதா அவர்கள்தான்.

நான் புத்தகங்கள் பெரு வாரியாக படிக்க ஆரம்பித்ததெல்லாம் எனது இலங்கலை இருதி ஆண்டில் இருந்துதான். அப்போதெல்லாம் என்ன கிடைக்கிறதோ அதை திரை வாசிப்பான் கொண்டு ஒரே மூச்சில் படித்து விட்டு சென்று விடுவதுதான் என் வழக்கம். அப்படியான ஒரு நாளில்தான், அச்சில் வடிக்க பட்ட எழுத்துக்களை வாசிக்க இயலாதவர்களுக்கான book share இனையம் வழியாக எனக்கு சுஜாதா அறிமுகமானார்.
அந்த தளத்தில் அப்போதைய காலகட்டத்தில் கிட்டதட்ட 250 தமிழ் நூல்கள் தரவேற்றபட்டிருந்தன. அதில் 10க்கும் மேர்ப்பட்ட நூல்கள் சுஜாதாவின் நூல்களாக இருந்ததாக எனக்கு நினைவு. நான் முதல்முதலில் அந்த தளத்தில் தரவிரக்கி படித்த புத்தகம் பிரிவோம் சந்திப்போம் என நினைக்கிறேன். 

அதன் பின்னர் அவரது ஸ்ரீரங்கத்தின் வாழ்க்கையை பேசும் ஸ்ரீரங்கத்து தேவதைகள், நம் மக்களின் மூட நம்பிக்கையை அப்பட்டமாக வெளிச்சம்போட்டுக் காட்டிய கம்பியுட்டர் கிராமம், விஞ்ஞானத்தின் பரினாமத்தை பளிச்சென சொல்லும் என் இனிய இயந்திரா என அந்தத் தளத்தில் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல் ஒரு பெரிய லிஸ்ட்டாக என் மண்டைக்குள் இருக்கிறது.
இப்படியாக, அத் தளம் மூலமாகத்தான் சுஜாதா என்னுள் நீக்கமற நிறைய ஆரம்பித்தார். பின்னர் பார்வையற்றவர்களுக்கு ஏற்றவாரு O.C.R, ஸ்கேனிங், என தொழில்நுட்பங்கள் கால மாற்றத்திர்க்கேர்ப்ப கொஞ்ஜம் கொஞ்ஜமாக வளர, நானும் அதர்க்கேற்றவாரு எனது புத்தக வாசிப்பை ப்ரதான வேலைகளில் ஒன்றாக மாற்றிக்கொண்டேன். 

 அவ்வாரு நான் படித்த புத்தகங்களில் 75 சதவிகித புத்தகங்கள் வாத்தியாருடையதுதான். அப்படி படித்தவைதான் கடவுள் இருக்கிறாரா?’, ‘, ‘காயத்ரி, ‘பத்து செகண்ட் முத்தம், ‘கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு சிருகதை நூல், ‘கணையாழியின் கடைசிப்பக்கங்கள், என அந்த பட்டியல் டெலிஃபோன் பில் மாதிரி நீண்டுகொண்டே போகும்.
  
graphic சுஜாத்தா

இன்றும் கூட சுஜாதாவின் நாவல்களில் வக்கிலாக வரும் கனேஷ் வசந்த் கதாபாத்திரங்கள் அவை உன்ன்மை என்றே நம்பும் கூட்டம் இருக்கிறது. அந்த அளவுக்கு அவர்கள் இருவரையும் மிகத் தத்துருபமாய் வாசகர்கள் முன்பு தன் எழுத்தில் காட்சிப்படுத்தி காட்டி இருப்பார் சுஜாதா.

இலக்கியத்தின் எல்லா துறைகளிலும் கால் பதித்த வாத்தியார் சரித்திர நாவலையும் விட்டு வைக்கவில்லை. அவர் எழுதிய இரத்தம் ஒரே நிரம், ‘காந்தலூர் வசந்த குமாரன் கதைபோன்ற 
சரித்திர நாவல்கள் மூலம் கல்க்கி, சாண்டில்யன் காலத்து சரித்திர நாவல் பாணிகளை உடைத்தெரிந்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்திருந்தார். 

பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட என் இனிய இயந்திராமூலம், நமது கிராமப்புற மக்களிடம் கூட கம்ப்யூட்டர், ரோபோ போன்ற டெக் உலகத்தின் வார்த்தைகளை கொண்டு சேர்த்ததில் சுஜாதாவின் பங்கு மகத்தானது.
நான் இந்த நாடகத்தை தொலைக்காட்சியில் பார்த்ததில்லை என்றபோதிலும்எழுத்துக்கள் வாயிலாகத்தான் இன் நாவலை படிக்கும் வாய்ப்பை பெற்றேன். அதில் வரும், ஜீனோ என்கிற ரோபோ நாய்க்குட்டி என் மனசுக்குள் இன்னும் குடிகொண்டு இருக்கிறது. அதை அவ்வளவு எளிதில் மரந்து விட முடியுமா என்ன...? சைவ தமிழ், சமய தமிழ் என்பது போல விஞ்ஞான தமிழ் என்று ஒரு புதிய 
பரிணாமத்தை தனது எழுத்துக்களால் கொண்டுவந்தவர் சுஜாதா..
  
graphic சுஜாத்தா

கமலுடன் விக்ரம், மணிரத்னத்துடன் ரோஜா, உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் என்று சினிமாவில் சுஜாதாவின் பங்களிப்பைச் சொன்னாலும், இயக்குனர் ஷங்கரின் வளர்ச்சியில் ஒரு பெரும் பங்கை வகித் திருக்கிறார் சுஜாதா.

எந்திரன்உருவான விதம் பற்றி ஒரு பேட்டியில் ஷங்கர் இப்படிச் சொன்னார். "மூன்று முறை நாங்கள் இந்த கதை பற்றி விவாதித்து இருக்கிறோம். அவர் மறையும் முன்பாகவே ஸ்கிரிப்ட் முழுவதும் தயாராகிவிட்டது. நாங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்யும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான விஷுவல் தன்மையை, மிகச் சாதாரணமாக தனது எழுத்துக்களில் கொண்டுவந்துவிடுகிறார் சுஜாதா'.

சுஜாதாவின் எழுத்துக்களில் இருந்த பரிச்சயமே ஷங்கர் இன்று இந்தியாவின் ஹைடெக் இயக்குனர் என்று உருவாக ஒரு காரணம். இந்தியன் படத்தின் இறுதிக்காட்சி. லஞ்சம் வாங்கியதற்காக தனது சொந்த 
மகனையே கொள்ள துடிக்கிறார் இந்தியன் கமல். அவனுக்காக மீசையை இழக்க துணிந்த சேனாதிபதி இன்னைக்கு அவனையே இழக்கத் தயாராகிட்டான்" என்று கமல் சொல்லும்போது, “புத்திக்கு தெரியுது, ஆனாமனசுக்கு தெரியலையே என்று சுகன்யா அவரை தடுக்கிறார். அப்போது கமல் சொல்லும் பதில், "எனக்கு புத்தி,மனசு எல்லாம் ஒண்ணுதான்".
மிகச் சுருக்கமான வசனங்களில் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்த்திவிடுவதில் சுஜாதாவுக்கு நிகர் அவரே. 90 களில் தன் அழுத்தமான வசனங்களால் இரண்டாயிரத்தின் அரசியலை முகத்தில் அறைந்தார் போல் சொல்லிவிட்டு போனவர் சுஜாதா.

என் இனிய இயந்திராநாவலில் வரும் ஹோலோக்ராம் என்கிற கான்செப்ட்டைதான் தனது ஜீன்ஸ்படத்தில் வரும் கண்ணோடு காண்பதெல்லாம்பாடலின் கான்செப்டாக பயன்படுத்தினாராம் ஷங்கர். ஒரு எந்திரத்தால் உருவாக்கப்பட்ட நிழல் உருவம் நாட்டையே ஆட்சி செய்வதாக வரும் இந்த நாவல், எந்திரன்கதை உருவாக காரணமாகக்கூட இருந்திருக்கலாம்.

முதல்வன் படத்தில் பஸ் ஊழியர் - மாணவர்கள் மோதல், அதைத் தொடர்ந்து வரும் ட்ராபிக் ஜாம் காட்சிகள் இவை அனைத்தையும் சுஜாதா அவர்கள் முதலில் ஷங்கரிடம் சிறுகதையாகத்தான் எழுதிக் கொடுத்தாராம். பின்புதான் அதை படமாக்கினாராம் ஷங்கர். முதல்வர் ரகுவரனை அர்ஜுன் பேட்டிகாணும் படத்தின் ஹைலைட் காட்சிக்கு சுஜாதாவை விட வேறு யாரும் இத்தனை சிறப்பாக வசனம் எழுதிவிட முடியுமா என்ன?

பாய்ஸ் மற்றும் அந்நியன் போன்ற ஷங்கரின் ஏனைய படங்களிலும் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம். "சிவாஜி"யில் ரஜினிகாந்துக்கு ஏற்றார்போல, “பேரை கேட்டாலே சும்மா அதிருதில்லபோன்ற வசனங்கள் குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கும் பேசப்படும் வசனமாக  இருக்கிறது.

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும், அந்த வருடம் வெளிவந்த சிறந்த புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வாராம் சுஜாதா. அந்த மிகச் சிறந்த பணியை, அமரர் சுஜாதாவின் பெயரால், தற்போது செய்துவருகிறார் 'உயிர்மை' மனுஷ்யபுத்திரன். உயிர்மை பதிப்பகம், சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து, வருடம்தோறும் வாத்தியாரை சிறப்பிக்கும் ரீதியில் சுஜாதா விருதுகளை வழங்கி வருகிறார்கள்.

தமிழின் நவீனத்துவத்திற்குப் பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3ஆம் தேதி, இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு வருடத்திலும் வெளிவரும் சிறந்த சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு, கட்டுரை தொகுப்பு, சிறந்த சிறுபத்திரிக்கை, சிறந்த வலைப்பதிவு என ஆறு பிரிவுகளில் அவரது பிறந்தநாளான மே 3ஆம் தேதி விருது வழங்கி வருகிறார்கள். இவ்வளவு ஏன் இந்த வருடத்திர்க்கான விருது வழங்கும் விழாகூட இன்நேரம் மிக ப்ரம்மாண்டமாய் நடந்து முடிந்திருக்கும்.
பிறந்த நால் வாழ்த்துக்கள் ஆசானே!!!
தொடர்புக்கு: kumaravel.p95@gmail.com 

நீங்கள் இதைத் தவறவிட்டிருந்தால்

  நூல் அறிமுகம்: ரத்தம் ஒரே நிறம் - பொன். குமரவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக