வாசகர் கட்டுரை: திரைவிமர்சனம்: ஜிப்ஸி


ப. அருண்குமார்
graphic ஜிப்சி போஸ்டர்

 "நாடோடி மனிதனின் வாழ்க்கை என்ற பொருளில் வெளிவந்திருக்கும் திரைப்படம்ஜிப்ஸி’.
அற்புதமான தலைப்பில் எடுக்கப்பட்ட இந் திரைப்படம் சிறந்த கதை அம்சத்தை கொண்டுள்ளது.
இயக்குநர் படத்தின் வழியாக இந்தியாவின் பல விதவிதமான பகுதிகளை நமக்குச் சுற்றிக்காட்டுகிறார். தமிழ் சினிமாவின் வழக்கத்திற்கு மாறாக இப்படத்தில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதே நேரம் அவர் குரலை நாம் கேட்பது மிகவும் அரிதாகத்தான் இருக்கும். முக பாவத்திலும், நடிப்பாற்றலிலும் அவர் படத்தில் ஜொலிக்கிறார்.

தற்போது அதிகம் பேசப்படும் முத்தலாக் எனப்படும் இஸ்லாமியர் வழக்கத்தை விரிவாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ராஜுமுருகன். மேலும், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையையும், வழிபாட்டு முறைகளையும் விவரித்துள்ளார். கீதை, குர்ரான், விவிலியம் ஆகிய மூன்று மதப் புனித நூல்களும் ஒரே கருத்தையே வலியுறுத்துகின்றன என்று நிறுவ முயல்வது சிறப்பு.

இயக்குநர் ராஜுமுருகன் வழக்கம் போலவே வசனங்களில் பலரை வறுத்தெடுத்திருக்கிறார். அரசியல்வாதிகள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், இந்திய சுற்றுலாத் துறையின் இயல்புகளையும் நையாண்டித்தனமாக நமக்குள் கடத்துகிறார்.

இப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் சேகுவேரா என்ற குதிரைதான். கதையில் ஒரு முக்கியப் பாத்திரமாகவே வலம் வருகிறது சேகுவேரா.
யாருக்கு வாக்களித்தாலும் மக்களுக்கான பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன என ஓரிடத்தில் சொல்லியிருப்பார்.  அரசியல் கட்சித் தலைவர்களையும், மதங்களையும் பங்கமாய்க் கலாய்த்திருப்பார். இவற்றைக் கூர்ந்து கவனித்தால் மட்டும்தான் புரியும்.
மிகவும் அற்புதமாக பாடல் வரிகளை கொண்டு புதுவிதமான இசையை வைத்து திரைப்படத்திற்கு மெருகேற்றியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.

இப்படத்தில் ஒரு சில காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அவை அனைத்தும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைக் குறிக்கிறது இருந்தாலும் சென்சார் இதில் உள்ள ஒன்றையும் விளக்கவில்லை!
நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்தும் படத்தில் கலாய்க்கப்பட்டிருக்கும்.  நாம் பார்க்கும்போது அப்படிச் சிறு துளியளவுகூடத் தெரியாது.

படத்தைப் பாருங்கள். பாடல்களைக் கேளுங்கள்.
எனக்குப் பிடித்த ஒரு பாடலின் வரிகளோடு கட்டுரையை முடிக்கிறேன்.
"கால் போகிற காடுகள் மேடுகள்
கையைச்  சேர்க்கின்றதே இசையிலே
வாய் பேசிடும் ஓசையை காட்டிலும்
அன்பின் ஜாடைகளே மொழிகளே"
"ஓடையா ஓடினா
சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையே"
"கூரையில் தங்குவோம்
பால் நிலா சொல்லடா
எங்குமே செல்லடா"
"தேசாந்திரி நான்
தேசாந்திரி நான்
கால் போகிற காடுகள் மேடுகள்
தேசாந்திரி நான்"

(கட்டுரையாளர் இளங்கலை ஆங்கிலம் முடித்திருக்கிறார். பெங்கலூரிலுள்ள the enable india என்ற நிறுவனத்தில் கணினிப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புக்கு: arunkumar1999620@gmail.com

1 கருத்து:

  1. திரை விமர்சனம் அருமையாக இருந்தது கட்டுரையாளருக்கு நான் பாராட்டுக்கள் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் குறிப்பாக பாடல் வரிகள் மிக அருமையாக இருந்தது..

    பதிலளிநீக்கு