கலை: கொரோனா பாடல்கள் - ம. முத்துக்குமார்


       கொரோனா. இந்த மூன்றெழுத்து ஒற்றை வார்த்தை உலகின் மூலை முடுக்கில் எல்லாம் புகுந்து, மக்களைத் துவம்சம் செய்துகொண்டிருக்கிறது.  ஊரடங்கால், வீடடங்கியிருக்கும் மக்களுக்குப்  பொழுதைப் போக்குவதே பெரும் சுமையாக இருக்கிறது.
       தொலைக்காட்சி, அலைபேசி, புத்தகவாசிப்பு, வீட்டு வேலை, வீட்டிலிருந்து அலுவலக வேலை, கனவன் மனைவி சண்டை என்று ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வழிகளில் பொழுது போய்க்கொண்டிருக்கிறது.
       இது இப்படி இருக்க, வீட்டிலிருந்தபடியே சமூக ஊடகங்களில் தவமாய் தவமிருக்கும்  நெட்டிசன்களின் அற்றாசிட்டி, பாய்ண்ட் டூ பாய்ண்ட் வேகத்தில் வதந்தி‍, வக்கிரமான கிளாமர் ஃபோட்டோஷூட், மீம்ஸ் என்று லைக்குகளையும், கமெண்டுகளையும்‍, தெறிக்க விடுகின்றனர்.
       இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறத்தில் பொறுப்பான விழிப்புணர்வும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.  கொரோனாவை ஒழிக்க, கொலவெறியோடு விழிப்புணர்வுப் பாடல்கள் கானா, மெலோடி, ஃபோக், என்று பல வகையில் வெவ்வேறு மொழிகளில் வந்தவண்ணம் உள்ளன. இப்படி பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், காவலர்களும் விதிவிலக்கு இல்லை.
       அப்படி தமிழில் வந்த பிரபலமான பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

graphic நீல நிறம் கொண்ட பின்னணியில் 'கில் கொரோனா வித் மியூசிக்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது

       தில்லானா தில்லானா, மதுர மரிக்கொழுந்து வாசம், மருதமலை மாமணியெ முருகையா, ஒய் திஸ் கொலவெறி, மரன மாஸ், என்று பிரபலமான பாடல்கள் எல்லாம் கொரோனா மயமாக ஒலிக்கிறது.
       இப்படி மெட்டமைத்தும், சொந்தமாக ராகம் அமைத்தும், பல பாடல்கள் கொரோனாவுக்கு எதிராகவும், விழிப்புணர்வோடும், இணையத்தில் உலா வருகின்றன.
       அவற்றில்  இப்படி ஒரு பாடல். பூவிருந்தவல்லி பார்வைக் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் பாடிய, 
வந்தது பாரு கொரோனா;
 வதந்தி பறப்ப வேனாம் என்று தொடங்கும் பாடலின் வரிகள் மாஸ்.   அப்பள்ளி ஆசிரியர் . சரவன மணிகண்டன் அவர்களால் எழுதப்பட்டு, நாட்டுப்புற ராகத்தில் பாடப்பட்ட இந்தப் பாடலை, கண்ணை முடிக் கேட்கும்போது நாட்டுப்புற கலைஞர்கள் வீதியில் பாடி, ஆடி, நடித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு, காட்சியாக பிரதிபலிக்கிறது‌.
குரூப் சேற வேண்டாம் பாசு,
கேப்பு விட்டு நின்னு பேசு.
கைக்குட்டையை யூஸ்பண்ணுங்க,
கையை நல்லா வாஷ் பண்ணுங்க..
பாடலைக் கேட்க.. https://youtu.be/VfXh0Rd9p18

       மதுர மரிக்கொழுந்து வாசம்என்ற பாட்டுக் கொரோனாவிற்காக இப்படி மாற்றி ஒலிக்கிறது.. 
சைனாக்காறன் பண்ணிவச்ச வேல,
இப்ப வந்துருச்சு நமக்கு மரன ஓல,
உனக்கு கொஞ்சங்கூட இல்லையாடா மூள?
ஏன்டா பாம்ப புடுச்சி சாப்பிடுறதா வேல?” என்று‍‍ கானாவில் விலாசுகிறார் கானா சுதாகர்.
அப்பாவி மக்களும் போராங்க இறந்து,
சீக்கிறம் கண்டு பிடிங்கையா மருந்துஎன்று அக்கறையோடும்,
தமிழ்நாட்டத் தாக்க வருது ஃபாஸ்டா,
ஒரு ஊயிரு கூட போகக்கூடாது வேஸ்டா என்று மனிதாபிமானத்தோடும், மார்ச் 13-ஆம் தேதியேவலை ஒலியில் பதிவேற்றி எச்சரித்திருக்கிறார்.. 
பாடலைக் கேட்க..  https://youtu.be/wLogN1ddGCI

       விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற தூக்குத்துற பாடலை எழுதிய கவிஞர் ஆஸ்மின், ‘வருமுன் காப்போம் என்று நம்மை எச்சரிக்கும் வகையில் 
நாளை நமக்கொரு காலம் வரும்,
தெரு நாயின் நிலையிலும் வாழ வரும் என்று ஆரம்பிக்கும் பாடலை எழுதியுள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால், ‘வரும் என்ற வார்த்தையை, ஒவ்வொரு வரியின் முடிவிலும் வரவைத்திருக்கிறார்.
புறம்போக்கு என்கிற பொதுவுடமை எனும் படத்தின் இசையமைப்பாளரும், உலகப் புகழ் பெற்ற இசைச் சிறுவன் லிடியன் நாதஸ்வரத்தின் தந்தையுமாகிய வர்ஷன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.. 
பாடலைக் கேட்க. https://youtu.be/S1xs4_wghHg
       கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய கவிதைக்கு, இசையமைத்துப் பாடியிருக்கிறார் பாடும் நிலா எஸ்.பி.பி.
கரோனா கரோனா கரோனா 
அனுவை விடவும் சிறியது
அனுகுண்டைப் போல் கொடியது.
எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
அத்தனை போரிலும் அவனே வென்றான். இப்படியாக, நம்பிக்கையை விதைத்திருக்கிறார் வைரமுத்து.  அதை நமக்கு அறுவடை செய்து அளித்திருக்கிறார் எஸ்.பி.பி.  பின்னணி இசையின் ஆடம்பரம் இல்லாமல், எளிமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாடலைக் கேட்க.. https://youtu.be/UdT3XUG56_k

       ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற பாணியில், மேலே குறிப்பிட்டஎஸ்‌‌.பி.பி. மற்றும் வைரமுத்து  கூட்டணி, முத்து திரைப்படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாடலையும் கொரோனா வெர்ஷனாக மாற்றியுள்ளது.
அதையும் கேளுங்களேன்... https://youtu.be/CCCJoqdEJWE

       ஊரே கொரோனா பற்றி பாட, உலக நாயகன் சும்மா இருப்பாரா... அவரும் கொரோனா இசை களத்தில் குதித்திருக்கிறார். நடிகர் கமல் ஹாசன் அவர்கள் ஏப்ரல் 23 வியாழக்கிழமை அன்று ஜூம் செயலி மூலம்
திங்க் மியூசிக் சார்பாக வெளியிடப்பட்ட இந்தப் பாடலுக்கு M.ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், படத்தொகுப்பு செய்தவர் மஹேஷ் நாராயணன்.
கமலுடன் இணைந்து மாஸ்டர் லிடியன், பாம்பே ஜெயஸ்ரீ, ஆண்ட்ரியாஜெரிமியா, யுவன் சங்கர் ராஜா, அனிருத், சித்ஸ்ரிராம், சித்தார்த், ஜிப்ரான், முகேன் ராவ், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாஸன், தேவி ஸ்ரீபிரசாத் என்று நச்சத்திற பட்டாலங்கள்‍, பாடலின் வரிகளைப் பங்கிட்டு பாடியுள்ளார்கள். இந்தப் பாடலின் வரிகளை கமல் ஹாசன் எழுதியுள்ளார்.

       இந்தப் பாடலைப் பற்றி ஒரு செய்தி உள்ளது. கமல் ஒரு கவிதையை எழுதி, அதை அவரின் நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பி வைத்தாராம். அவர்களில் சிலர், அந்தக் கவிதையைப் பாடலாகப் பாடி, வீடியோவாக அவருக்கு அனுப்பி வைத்தார்களாம். அதைப் பார்த்த கமல், ஓ பாட்டாவெ பாடிட்டிங்களா! அப்ப தலைப்பை அறிவும் அன்பும் அப்படினு போடுங்க என்று கூறி, அவற்றைத் தொகுத்து முழு பாடலாக மாற்றினாராம்.
       இதைக் கேட்ட கமலின் நன்பர் ஒருவர், கமல், இடையில மானே, தேனே, மயிலே, குயிலே இதையெல்லாம் கானுமே? என்று கேட்க அதற்கு கமல், கொரோனாவப் புடிச்சு கொஞ்சவாமுடியும்? என்று கூறினாராம்.
    உம்ம் இப்படி கத கட்டி விடலாம் என்று நினைக்கிறேன்.
ஆத்தாடி! நமக்கெதுக்கு இந்த வம்பு? டிஸ்கிலேமர் போட்டுருவோம்
(பொருப்புத்துரப்பு)  மேல் கூறிய செய்தி வெறும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல.
சினையுறும் சிறு உயிர் கூட
உறவெனப் புரிந்திட பாரு...
உலகினும் பெரியது நம்
அகம் வாழ் அன்புதான்.  எனும் வரிகள் மனதை வருடிச் செல்கிறது.
இந்தப் பாட்டக் கொஞ்சம் கேளுங்க பாசு: https://youtu.be/kDUqOcvUVIQ

       இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஒருசில திரைப்பட பாடல்கள் கொரோனாவிற்காகவே எழுதப்பட்டது போல் கச்சிதமாக பொருந்துகின்றன. அவற்றில் தர்மம் தலை காக்கும் என்ற படத்தில் இடம்பெற்ற,
தொட்டுவிட தொட்டுவிட தொடரும்
 கை பட்டுவிட பட்டுவிட மலரும்என்ற பாடல் வரிகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
       மேலும், பரமசிவன் திரைப்படத்தில் இடம்பெற்ற‍,‘ஆச தோச பாடலில் அமைந்திருக்கும் கீழ்க்கண்ட வரிகளைப் பாருங்கள்..
நான் பொறந்தேன் பத்தூரு காலி,
        வளந்தேன் ஜில்லாவும் காலி,
        சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா.
நேத்தைக்கு வத்தலகுண்டு,
நாளைக்குச் செங்களுபட்டு,
இன்னைக்கு உனக்குன்னு வந்துருக்கேன் என்ற வரிகளையெல்லாம், கொரோனாக்களே வந்து கோரஸா பாடுவது போல்தான் இருக்கிறது.. 
       இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், சாம் சிஎஸ், ஸ்ரீகாந்த் தேவா,  பாடகர்கள் வேல்முருகன், மகாலிங்கம், செந்தில் ராஜலட்சுமி, கானா சரவெடி சரன்,  நகைச்சுவை நடிகர்கள்  வடிவேலு, கருனாஸ், மனோபாலா,  நடன இயக்குனர் பிக்பாஸ் பிரபலம் சாண்டி, என்று பாடல்களும், பாடியவர்களின் பட்டியல்களும் நீண்டுகொண்டே போகிறது.. 
       எங்கும், எதிலும், எதற்கும் இசைவதால் தான் இசை என்று பெயர் போலும். இசை என்பது வெறும் பொழுதுபோக்கு இல்லை. நம் வாழ்வின் முன்னுரையாகத் தொடங்கி, முடிவுரையாக முடிகிறது இசை.
ஊதற்பை உடைந்துவிடும்.
அதனால் புல்லாங்குழலாய் வாழ்வோம்.. 

(கட்டுரையாளர்: திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் வரலாற்றுத் துறையில் முதுகலை முதலாமாண்டு பயின்றுவருகிறார்).
தொடர்புக்கு: billakumar@gmail.com

3 கருத்துகள்:

  1. Excellent style of writing, congratulations Muthukumar!

    பதிலளிநீக்கு
  2. கட்டுரையின் நடை அருமையாகவும், தொகுத்தவிதம் சுவாரசியமாகவும் இருக்கிறது. வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. இத்தனை பாடல்கள் அந்த koronaa குறித்து வந்திருக்கிறதா என்பதை சான்றுகளோடு சுட்டிக்காட்டிய உங்களின் கட்டுரையை படித்து வியந்து போனேன்! மிகவும் சிறந்த நடையில் அதனை சேகரித்து அளித்திருக்கிறீர்கள். இன்னும் எண்ணற்ற படைப்புகள் உங்களிடமிருந்து நாங்கள் சிலாகிக்க கிடைக்கும் என எண்ணி வாழ்த்துகிறேன். பாராட்டுக்கள் உங்களுக்கு!

    பதிலளிநீக்கு