தலையங்கம்: பத்தாம் வகுப்பு தேர்வும் பார்வையற்ற மாணவர்களும்


graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் அடங்கிய விரல்மொழியரின் சின்னம்

       ஜூன் 15-ஆம் தேதி முதல் 2019-2020 கல்வியாண்டிற்கான தமிழக அரசின் 10-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. ஒவ்வொரு பெருஞ்செயலையும் மேற்கொள்ளும்போதும் அச்செயலின் பல கோணங்களை அரசு ஆராய்ந்திருக்க வேண்டும்அத்தகைய ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

       பதிலி எழுத்தரின் துணை கொண்டு எழுதும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பொதுவான தேர்வு நடைமுறைகள் போதுமானவை தானா என்று அரசு சிந்திக்காமல் போனது வருத்தமளிக்கிறது. ‘மற்ற மாணவர்களைப் போலவே இவர்களுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்என்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியது இன்னும் கவலையைக் கூட்டுகிறது. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரச்சனைகள் அல்லது பதிலி எழுத்தர் துணை கொண்டு எழுதுவோர்க்கான பிரச்சனைகள் என்று தேர்வுத் துறை எதையுமே கருதவில்லையா?

       அண்மையில் பள்ளிக் கல்வி இயக்குநரால் வெளியிடப்பட்ட தேர்வு குறித்த செயல்முறைகளில் பதிலி எழுத்தர்கள் குறித்தோ, அவர்கள் துணை கொண்டு எழுதுவோர் குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. அவ்வளவு ஏன்? மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவலே இல்லை என்றால் அதை என்னவென்று சொல்வது?

       ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுகின்றனர். இந்தப் பெருந்தொகையினர் குறித்த கொள்கை முடிவு அரசிடம் எப்படி இல்லாமல் போனது?

       சிறப்புப் பள்ளிகளில் படிப்பவர்கள், பொதுப் பளிகளில் படிப்பவர்கள் என்று நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் விடுதிகளில் தங்க வேண்டியிருக்கிறதே! ஒரு வேளை தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டால் அவர்களை எப்படி தொடர்ந்து பத்திரப்படுத்துவது என்று அடுத்த நிலைக்கு தற்போது வந்துவிட்டார்கள் மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள்.

       இதனால்தான் 10-ஆம் வகுப்பு தேர்வுகளையே ரத்து செய்யவேண்டும் என்று சில அமைப்புகள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. அவர்கள் கேட்பதில் இருக்கும் சரி, தவறுகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அவர்கள் கேள்வியில் இருக்கும் அச்சத்தின் நியாயத்தை அரசு உணரவேண்டும். அதைப் புரிந்துகொண்டு, அந்த அச்சம் ஏற்படாதவாறு அவர்களைக் காக்கவேண்டும்.

       பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் மீது அக்கறை கொண்டவர்களும், அவர்களது ஆசிரியர்களும், பெற்றோரும் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலிலிருந்து அவர்களை விடுவிக்கவேண்டும். பார்வை மாற்றுத்திறனாளிகள் பதிலி எழுத்தர்கள் துணையின்றி எழுதும் தேர்வு முறைகள் குறித்து ஆய்வு  செய்வதற்கு உகந்த காலமாய் அறிஞர்கள் இதை மாற்றிக் கொள்ளவேண்டும்.

       எஞ்சியுள்ள நாட்களிலாவது தமிழக அரசு பதிலி எழுத்தர்கள் துணையுடன் தேர்வு எழுதுவோர் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கவேண்டும்.

6 கருத்துகள்:

  1. பத்தாம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களின் இடர்பாட்டை அழுத்தமாய் அலசுகிறது இந்த பதிவு. சிறப்பு!

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு வசதிகள் வாய்ப்புகள் எல்லாம் பெருகி விட்ட பிறகும் ஒரு சாமானிய சாதாரண மனிதன் கூட தனது ஒரே ஒரு கருத்தின் மூலம் நாட்டின் கவனத்தையே கவரக்கூடிய சூழல் இருக்கின்ற எந்த காலத்திலும் மாற்றுத்திறனாளிகள் துறை இப்படி தூங்கிக் கொண்டிருப்பது உண்மையிலேயே வியப்பைத் தருகிறது ஒரு சாமானிய மனிதனாலேயே கருத்தை நாடறிய செய்ய முடிகிறது என்றால் ஒரு மாற்றுத்திறனாளிகள் துறை நினைத்தால் அரசாங்கத்தில் உடனுக்குடன் மாற்றுத்திறனாளிகள் கூறிய கருத்துக்களை தெரிவித்து அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் அப்படி ஒருவேளை அரசு அலட்சியப் படுத்தினாலும் அதை வெளியே கொண்டுவந்து சீர்திருத்தங்களைச் செய்ய முடியும் ஏன் இப்படி அலட்சியமாக இருக்கிறார்கள் உண்மையிலேயே வியப்பைத் தருகிறது வருத்தம் தருகிறது இவர்களுடைய செயல் இந்த தலையங்க கருத்துக்களை அப்படியே நமது மாற்றுத்திறனாளி துறை ஆணையர் அவர்களுக்கு இதை அனுப்பி அவர் கவனத்தை ஈர்க்க வேண்டும் அருமையான கருத்துக்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு மாற்றுத்திறணாலிகள் அதிலும், பார்வை மாற்றுத்திறணாலிகள் பத்தாம்வகுப்புப் பொதுத் தேர்வை எதிகொல்ள்வதில் உள்ள நடைமுறைச்சிக்கல்களை அழுத்தமாகவும், சுருக்கமாகவும் சொல்லிய விதம் பாறாட்டிற்குரியது.

    பதிலளிநீக்கு
  4. ஜெயராமன் தஞ்சாவூர்.6 ஜூன், 2020 அன்று PM 1:11

    இந்த தலையங்கம்
    அரசாங்கத்தாரின் உள்ளங்களைத் தொட வேண்டும்;
    மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும்.
    தலையங்கம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. கருத்தளித்த அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு