அறிவிப்புகள்


1. அளித்த ஆதரவிற்கு நன்றி.  
      விரல் மொழியர்-25 வெற்றி விழா கொண்டாட்டம் 12-7-2020 அன்று இணைய வெளியில் நடைபெற்றது. அதற்கு முன், ஒரு மாதமாகவே இணையவழிப் போட்டிகள் பலவற்றையும் விரல்மொழியர் ஏற்பாடு செய்திருந்தது. இவை புது முயற்சிகள் என்பதோடு முதல் முயற்சிகளுங்கூட. இவற்றிற்கு வடிவம் கொடுக்கையில் சில குறைபாடுகளும், பெரும் வெற்றியும் ஏற்பட்டது. எதுவாகினும் உவப்பத்தலைகூடி உடனிருந்து ஊக்குவித்த உங்கள் அனைவருக்கும் விரல்மொழியர் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
2. பார்வையற்றோரின் படைப்புத் தொகுப்பு. 
      அந்தகக்கவிப் பேரவை பார்வை மாற்றுத்திறனாளி படைப்பாளர்களின் படைப்புகளைத் தொகுத்தளித்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலைக் காண பார்வையற்ற படைப்பாளர்களும் படைப்புகளும் என்ற முகப்புப் பக்கத்தில் உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.
 
3. ஞானி அவர்களுக்குப் புகழஞ்சலி

graphic கோவை ஞானி புகழஞ்சலிக்கூட்ட அழைப்பிதழ்

      எழுத்தாளரும் மாக்சிய சிந்தனையாளருமான கோவை ஞானியின் மறைவையொட்டி அந்தகக்கவிப் பேரவை, பார்வையற்றோர் முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை, விரல்மொழியர் மின்னிதழ் ஆகிய பார்வையற்றோருக்கான அமைப்புகள் கூடி 1-8-2020 அன்று இணையவழியில் புகழஞ்சலிக் கூட்டத்தை நடத்தின. இக்கூட்டத்தில் முனைவர் சுகுமாரன், பேராசிரியர் (ஓய்வு) கோயம்புத்தூர், முனைவர் . ஜவகர், உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம், திருவாரூர், முனைவர் கு. பத்மநாபன், உதவிப் பேராசிரியர், திராவிட பல்கலைக் கழகம், ஆந்திரா ஆகிய ஆளுமைகள் கோவை ஞானியுடனான தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். கவிஞர் முனைவர் கோ. கண்ணன் (குழல்வேந்தன்) தர்மபுரி மற்றும் கவிஞர் முனைவர் மு. ரமேசு, உதவிப் பேராசிரியர், ஆடவர் அரசு கலைக் கல்லூரி, சென்னை ஆகிய இரு ஆளுமைகளும் இரங்கட்பா படித்தனர்.

4. நமக்கு நாமே குறித்துக் கருத்தரங்கில் இதழாசிரியர்.
      ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கரோனா பேரிடருக்குப் பிறகான, பார்வை மாற்றுத்திறனாளிகளின் சிக்கல்களும் அதன் தீர்வுகளும்எனும் தலைப்பில் 26-7-2020 அன்று இணையவழி கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. அக்கருத்தரங்கில் நமக்கு நாமேஎனும் தலைப்பில் விரல்மொழியரில் வெளியான கட்டுரைகளை அடிப்படையாகக்கொண்டு விரல்மொழியர் இதழின் ஆசிரிய ரா. பாலகணேசன் அவர்கள் உரையாற்றினார். நிகழ்வைக்காண இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.

5. வாசகர்களின் கருத்துகளும் இனிக் கட்டுரையாகும்.
      இது விரல்மொழியரின் புது முயற்சி. இனி விரல்மொழியர் வாட்ஸ்-அப் குழுவில் ஒரு தலைப்பைக் கொடுத்து, அதற்கு வாசகர்கள் கூறும் கருத்துகளில் சிறந்தவற்றைத் தொகுத்து, கட்டுரையாக்கி, இதழில் கருத்துக்களம் என்னும் பகுதியில் வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துக்களைக் கேட்டு எழுத்தாக்கம் செய்யும் பணியை திரு. வினோத் சுப்பிரமணியன் செய்கிறார். விரல்மொழியர் வாட்ஸப் குழுவில் இணைய விரும்பும் வாசகர்கள் 9894335053 என்ற எண்ணில் விரல்மொழியரின் ஆசிரியரைத் தொடர்பு கொள்ளலாம்.

      உங்கள் விரல்மொழியர் சிறப்புற செயல்பட ஊக்கமூட்டும் சொற்களையும், ஆக்கப்பூர்வ கருத்துகளையும் கூறலாமே. உங்கள் படைப்புகளை viralmozhiyar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாமே.

      தொட்டுவிடும் தூரத்தில் எதுவுமில்லை. ஏனெனில், இப்போதுதான் எட்டு வைக்கத் தொடங்கியிருக்கிறோம். அதனால்தான் நண்பர்களே உங்களை அழைக்கிறோம்! வாருங்கள் உணர்ந்ததைச் சொல்வோம் உலகிற்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக