அறிவிப்புகள்

சூம் அரங்கில் ஒரு அறுசுவை விருந்து

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் 29-11-2020 அன்று இணைய வழியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவில்: மாண்புமிகு டாக்டர் சரவணன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் திருப்பரங்குன்றம் தொகுதி, நிறுவனர் சூரியா அறக்கட்டளை. திரு. பாலநாகேந்திரன் அவர்கள் இந்திய குடிமைப்பணிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக விழாவை சிறப்பிக்க, கலைநிகழ்ச்சிகளால் விழா களைகட்டியது. இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கிய விரல்மொழியர் மின்னிதழின் ஆசிரியர் ரா. பாலகணேசன்: ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முக்கியத்துவத்தையும், அது  மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக ஆற்றிய பணிகளையும் சுருக்கமாக எடுத்துரைத்தார். விழாவைக் காண இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.

தீர்க்கமாகவும் தெளிவாகவும் ஒலித்த ஒற்றைக் குரல்

டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று திருச்சிராப்பள்ளி பண்பலையில் விரல் மொழியர் ஆசிரியரின் பேட்டி ஒளிபரப்பப்பட்டது. விரல்மொழியர் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் பொது சமூகத்திற்கு புரியும் வகையில் மிக எளிமையாக எடுத்துரைத்தார் விரல் மொழியர் மின்னிதழின் ஆசிரியர் ரா.பாலகணேசன். நெறியாளர் சிறப்பாக வினாக்களை கேட்டு நிகழ்ச்சியை நெறிப்படுத்தி இருந்தார். பேட்டியைக் கேட்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.

 காற்றலையில் ஒரு கைகுலுக்கல்

இணையத்தென்றல் அரக்கட்டளை 12-12-2020 அன்று விரல்மொழியர் ஆசிரியர் குழுவுடன்  ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. அம்மேடையில் விரல்மொழியர் மின்னிதழின் ஆசிரியர் குழுவினர் தங்களைப் பற்றியும், இதழ் கடந்து வந்த பாதையையும், தாண்டி வந்த தடைகளையும், நெகிழ்ந்து நின்ற தருணங்களையும் அனைவரோடும் பகிர்ந்துகொண்டனர். பார்வையாளர்கள் உரையாடலின் வழியே எதிர்காலத்தில் விரல்மொழியர் பயணிப்பதற்கான பல புதிய திசைகளையும் சுட்டிக்காட்டினர். கலந்துரையாடலை திறம்பட வினோத்பெஞ்சமின் அவர்கள் நெறிப்படுத்தினார். கலந்துரையாடலை முழுமையாகக் காண இந்த  இணைப்பைச் சொடுக்குங்கள்.

புதுப்பொலிவுடன் ஒலி இதழ்கள்

வாசகர்களே! சில தவிர்க்கமுடியாத காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்ட விரல்மொழியர் மின்னிதழின் ஒலி இதழ் வெளியீடு மீண்டும் புதுப்பொலிவுடன் துவங்கியிருக்கிறது. இந்த ஒலி இதழ் உருவாக்கத்தில் துல்கல் நூலகத்தினர் நம்மோடு இணைந்ததாலேயே இந்த முயற்சி மீண்டும் சாத்தியமாகியிருக்கிறது. எனவே துல்கல் நூலகத்தினருக்கு விரல்மொழியர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெறுமகிழ்ச்சி அடைகிறோம். தற்பொழுது விரல்மொழியரின் 26 ஆவது மின்னிதழ் ஒலி இதழாகப் யூடியூபில் பதிவேற்றப்பட்டிருக்கிறது.

இதழின் அனைத்து கட்டுரைகளையும் கேட்க,

 இந்த 

  யூடியூப் ப்லேலிஸ்ட் சுட்டியைச் சொடுக்கவும். கேட்டப்பிறகு மரவாமல் ஒவ்வொரு கட்டுரைக்கும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டமாகத் தெரிவிப்பதோடு தொடர்ந்து விரல்மொழியர் ஒலி இதழ்களை கேட்க  விரல்மொழியர் யூடியூப் பக்கத்தை சப்ஸ்கிரைப்  செய்துகொள்ளவும்.


உதயமாகும் எண்ணங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறோம்

         அமேசான் பென் டு பப்ளிஷ் போட்டியை அறிவித்திருக்கிறது. குறுங்கட்டுரை பிரிவுக்கு 50 ஆயிரமும் நெடுங் கட்டுரை பிரிவிற்கு 5 லட்சமும் முதல் பரிசு. இப்போட்டி 10-12-2020 தொடங்கி 10-03-2021 வரை நடைபெறும். 

        எழுத ஆர்வம் இருப்பவர்கள் கதை கவிதை கட்டுரை நாடகம் நாவல் இப்படி எது வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அதனை அமேசான் கிண்டிலில்  மின் புத்தகமாக வெளியிட வேண்டும். மேலதிக தகவல்களுக்கு அமேசானின் பென் டு பப்ளிஷ் பக்கத்தை பாருங்கள். 

        இப்போட்டியில் கலந்துகொள்ளும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளைச் செய்ய தயாராக இருக்கிறது விரல்மொழியர் மின்னிதழ். பென் டு பப்ளிஷ் போட்டியில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். 

        ஏனெனில், இச்சமயத்தில்தான் அதிகமான வாசகர்கள் கிண்டிலில் புத்தகங்களை படிப்பார்கள். இச்சமயத்தில் புத்தகம் வெளியிட்டால் அதை பொது சமூகத்தினரும் கவனிப்பதற்கு வாய்ப்பாக அமையும். எனவே தயக்கத்தை உடைத்து எழுதத் தொடங்குங்கள். உங்களுக்கு உதவ விரல்மொழியர் தயாராகவே இருக்கிறது. 

        கிண்டில் மின்புத்தகம் தொடர்பான தொழில்நுட்ப உதவிக்கு 9159669269 என்ற  என்னைத் தொடர்புகொள்ளுங்கள். தொழில்நுட்ப உதவி வழங்குதல் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக