கருத்துக்களம்: ஆசைத்தம்பியும் அறிவுடை நம்பியும் - 5 - வினோத் சுப்பிரமணியன்

    
    graphic இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்வது போல் அமைந்த கார்டூன் படம்

அறிவுடை நம்பி             யல்புக்கு மாறாக விடுமுறை நாளன்றும் அவனது அலுவலகக் கேபினில் அமர்ந்திருந்தான். விவரம் அறிந்த தம்பி நேராக அவனது அலுவலகம் சென்று நம்பியின் கேபினுக்குள் நுழைந்தான்.

யாரோ வருவது போல உணர்ந்த நம்பி,

மத்த கேபினெல்லாம் பெருக்கிட்டீங்களா? ஒரு அரைமணி நேரம் கழிச்சு வந்து பெருக்கிடுறீங்களா!  என்று குனிந்த தலை நிமிராமல் கேட்க,

எது பெருக்கணுமா? நீதான் சண்டே கூட வெளியில வராம ஆஃபிஸ்லயே இருப்பண்ணா, மத்தவங்க கூட  உன் கூட சேர்ந்து குப்பை கொட்டனுமா? என்று ஆசைத் தம்பி கேட்ட பிறகுதான் தனது தலையைக் கணினியிலிருந்து விளக்கினான் நம்பி.

வாடா தம்பி. எப்போ வந்த?

நீ பெருக்க வேணாம்னு சொன்னப்போதான்.” என்று சொன்ன தம்பி,

ஏண்டா? ஒருமணி நேரத்துக்கு முன்னாடி போன்ல கூப்டு நான் ஆஃபிஸ்லதான் இருக்கேன் நீ இங்கேயே வந்துரு அப்டினு சொல்லிட்டு இப்போ வந்தா பெருக்கச் சொல்லுற.” என்று தம்பி கேட்க,

ஆமால்ல? சரி உட்காரு வா என்றான் நம்பி.

அப்பிடி என்னதான் நம்பி பன்னுற வெளியில கூட வராம? மனசுல பெரிய எந்திரன் ரஜினி அப்பிடினு நெனப்போ?”

கொஞ்சம் வேல தம்பி. அதுதான் வெளியில வரமுடியல. புரோகிராம் ஒண்ணு டிசைன் பண்ணி அனுப்பனுமாம். முடிச்சிட்டா நிம்மதியா இருக்கலாம்.”

முடிஞ்சிடுமா?”

முடிஞ்சிடும்.”

கொஞ்ச நேரம் நிசப்தம்.

சரிடா நம்பி! போனதடவ எழுதுன கட்டுர என்னாச்சு?”

எழுதியாச்சு என்று நம்பி சொல்ல,

பெண்கள் கருத்தே இல்லாத கட்டுரை. ஆனா ஒன்னு. தனியாப் பயணம் பன்னுற பார்வையற்ற ஆண்களுக்கே நிறைய சிரமங்கள் இருந்தப்போ, நீ பெண்கள் பக்கம் கூட கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி கருத்துகளை வாங்க முயற்சி செஞ்சி இருக்கலாம். ” என்றான் ஆசைத் தம்பி.

ஆமாம்.”

பேசாம ஒன்னு பன்னு நம்பி.”

சொல்லு.”

பார்வையற்ற பெண்களுக்கு சிறப்பு கருத்துக்களம் ஒன்னு ஏற்பாடு செய். அவங்களுடைய சிரமங்களை மட்டும் குறிப்பிடும்படியா அது இருக்கனும். என்ன சொல்லுற?”

என் மனதிலையும் அந்தத் திட்டம் இருக்கு தம்பி. நிச்சயமா செய்யனும்.”

சரி அது போகட்டும். இந்த மாசம் என்ன தலைப்பு?”

பார்வைத்திறன் குறையுடையவர்கள் அவர்களுக்கான தொழில்நுட்பம் இன்னும் என்ன மாதிரி வளரனும்னு நினைக்கிறாங்க? ஏன்?”

! இதை வெச்சிதான் கட்டுரையா?”

கட்டுரை அப்பிடினு சொல்ல முடியாது. எதுக்குனா இதைவிட ரொம்ப அருமையா பரிபூரணிநு  ஒருத்தங்க எந்த மாதிரியான தொழில்நுட்ப கருவியெல்லாம் பார்வை இல்லாதவங்களுக்கு வேணும் அப்பிடினு ஒரு அருமையான கற்பனையான ஒருநாள் நிச்சயமா நிறைவேற கூடிய சிறுகதையை எழுதி வெளியிட்டிருக்காங்க.”

அப்பிடியா? அந்த லிங்கு இருந்தா அனுப்பு!”

அறிவுடை நம்பி ஆசைத் தம்பியின் அலைபேசிக்கு அந்தச் சுட்டியை அனுப்பினான். அந்தச் சிறுகதைய நீங்களும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அதை ஆர்வத்துடன் படித்த தம்பி,

பரவாயில்லையே! ரொம்ப நல்லா இருக்கே!” என்று சொல்லி தொடர்ந்து பேசினான்.

இதுவே பார்வை இல்லாதவங்களுடைய தேவைகளையெல்லாம் தெளிவா குறிப்பிடுற மாதிரிதான் இருக்கு. நீ பாட்டுக்கு கட்டுரை எழுதுறேன், கவிதை எழுதுறேன் அப்பிடினு ஏதாச்சும் பண்ணி இவங்களுடைய உழைப்பை ஓவர் ஷேடோ பன்னாதஎன்று முடித்தான்.

அதையேதான் நான் கூட நெனச்சேன்.” என்றான் நம்பி.

சரி இப்போ என்ன செய்ய போற?”

அதுதான் புரியல. அதுக்குதான் உன்னைய வரச்சொன்னேன்.”

இருவரும் எதுவும் பேசாமல் யோசிக்க ஆரம்பித்தனர்.

சரி. ஒன்னு பன்னலாம்என்றான் தம்பி.

சொல்லு.”

இந்தந்தத் தொழில்நுட்பக் கருவியெல்லாம் இருந்தா நல்லா இருக்கும்னு அவங்க சொன்னாங்கல்ல.”

ஆமாம்.”

அந்த லிஸ்ட கொடு.”

நம்பி மேசையின்மீது இருந்த அந்தக் காகிதத்தை எடுத்துத் தம்பியிடம் கொடுத்தான்.

இதுல ஏன் நாம ஏதாச்சும் ப்ராஜக்ட் செய்ய கூடாது?”

புரியல.”

இதுல இருக்க கருவியில ஏதாச்சும் ஒன்றை நாமலே உருவாக்க முயற்சி செய்யலாம்.”

அடே! பிராக்டிக்கலா பேசுடா.”

முதலில் முயற்சி செஞ்சி பாக்கலாம். எதுக்கு எவ்வளவு செலவாகும் அப்பிடினு தோராயமா கணக்குப் போடலாம். அப்புறம் அத அரசாங்கத்துக்கிட்ட அனுப்பி ஏதாச்சும் சப்போர்ட் கிடைக்குதானு பாக்கலாம். அப்படியே ஏதாச்சும் பேங்குல கடன் கேட்கலாம்.”

இது முடியுமா? நாம கேட்டா கொடுப்பாங்களா?

நாம நெல்லுக்கும் வயலுக்கும் கேட்டாதான் யோசிப்பாங்க. அதுவே செல்லுக்கும் செயலிக்கும் கேட்டா யோசிக்காம தருவாங்க. முயற்சி செய்யலாம்என்று சொன்ன தம்பி அந்தக் காகிதத்தில் உள்ளவற்றை மீண்டும் ஒருமுறை பார்த்தான்.

நிறைய புது வரவெல்லாம் இருக்கு?என்று தம்பி கேட்க ஆமாம் என்றவாறே தலையசைத்தான் நம்பி.

சரி இந்த மாசத்துப் புதுவரவுல நாம முதல்ல பாக்க போறது கரூரைச் சேர்ந்த ஷேக் பரித்.”

எதுக்கு பத்து வருஷம் பின்னாடி போற நீ? மனசுல சுரேஷ் குமார்னு நெனப்பா? நாம இப்போ முன்னாடிதான் போகணும். என்ன கேட்டிருக்காரு சொல்லு.”

எளிதில் அணுகும் வகையில் ரூபாய் நோட்டுக்கள். தொட்டால் தெரியனுமாம்.”

அது அரசாங்கத்துக்கிட்டதான் இருக்கு. நாம ஒன்னும் செய்யறதுக்கில்ல.”

என்ன டா தொடக்கத்துலையே இப்படி சொல்லிட்ட?

வேற என்ன தம்பி பன்னுறது? ரூபாய் நோட்டுக்கலெல்லாம் ஒரு அஞ்சி வருசத்துக்கு முன்னாடி பார்வையற்றவர்களால ஓரளவு கண்டுபிடிக்குற மாதிரிதான் இருந்திச்சு. இப்போ அதுவும் இல்ல. நாம என்ன அச்சடிக்கவா முடியும்?”

அதுசரி. நிதித் துறை அமைச்சர் கிட்ட பேசலாம்னா எனக்கு நேரம் சரியா அமைய மாட்டிங்குது. அவங்களே பிரியா இருந்தாலும் நான் ரொம்ப பிசியா இருக்கிற மாதிரி ஆகிடுது. போதாதக்குறைக்கு கைலாசாவுல ஆரம்பிக்க போற முதன்மை வங்கிக்கு நான்தான் கவர்னரா இருக்கனும் அப்படினு நித்தி வேற ஒரே பிடிவாதம். நான் அங்கேயே போயி பார்வை இல்லாதவங்களும் பயன்படுத்துற மாதிரி பணத்தை அச்சிட்டுக்கிறேன். என்ன அதுக்கு ஒரு 18000 கோடி செலவாகும். பாத்துக்கலாம்.”

டே என்ன கணக்கெல்லாம் போடுற?”

எனக்கு முடியுது நான் போடுறேன். உனக்கென்ன?” என்று சொன்ன தம்பி,

சரி அடுத்து இது சரியா வருமா அப்பிடினு பாரு.”

அடுத்து யாருனு சொல்லு.”

வேலூரில இருந்து தாகிரானு  ஒருத்தங்க. அவுங்க ஊர்ல மழையெல்லாம் நல்லா பெஞ்சுச்சாம்.”

அதெல்லாம் அதுல இருக்கா? விஷயத்த சொல்லுடா டே.”

அவங்களோட கிராமத்துல நிறைய விஷ ஜந்துக்கள இவங்க எதிர்கொள்ள நேரிட்டதாம். அதனால விஷ ஜந்துக்களப் பார்வையில்லாதவங்க கூட அடையாளம் கண்டு பிடிக்குற மாதிரி கையில ஒரு கருவியும் அதனோட அவுட்புட் காதுக்கும் வராமாதிரி இருந்தா நல்லா இருக்குமாம்.”

சரி.”

அதுக்கு ஒரு 3000 கோடி போட்டுக்கோ.”

அவ்வளவா ஆகும்?”

போடுடா டே!”

சரி. அப்புறம்?”

புதுக்கோட்டையில இருந்து,”

சரவனனா?”

அது 17   வருசத்துக்கு முன்னாடி. இப்போ இது சுவேதா.”

என்ன கேட்டிருக்காங்க?”

பேசும் வீட்டு உபயோகப் பொருட்கள். குறிப்பா தொடுதிரையுடன் கூடிய பேசும் மின்னடுப்பு.”

இதுல இருந்து உனக்கு என்ன தோணுது தம்பி?”

இன்றைய நவீன காலத்துப் பார்வையில்லாத பெண்களுக்கும் சமையல் செய்யுறதுல ஈடுபாடு இருக்குனு தோனுது. குடும்பப் பொறுப்புல அவங்க எங்கேயும் கொறஞ்சு போகலனு தோனுது. தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்காத பார்வையற்ற பெண்கள் இருக்காங்கன்னு தோனுது. அதனால அவங்களக் குறச்சு யாரும் சொன்னாங்கனா அவசரப்பட்டு நம்பவேணாம்னு சொல்ல தோனுது.”

அடே! இந்த ப்ராஜக்ட் பத்தி என்ன தோனுதுன்னு கேட்டா என்னென்னமோ உலறுற?”

ஓஹோ. அப்படியா? அப்படினா ஒரு 16000 கோடி.”

அவ்வளவா ஆகும்?”

உலகம் முழுசும் சுமார் 39 மில்லியன் பார்வையில்லாதவங்க அதாவது கிட்டத்தட்ட 4 கோடி இருக்குறதா வெச்சிக்குவோம். அதுல இந்தியாவில சுமார் ஒரு கோடி பார்வையில்லாதவங்க இருப்பாங்கனு வெச்சிக்குவோம். அப்படி இப்படிநு ஒரு 2 கோடி பேருக்கு மின்னடுப்பு தயாரிக்கிறோம்னு வெச்சிக்குவோம்.”

அதாவது வெளிநாட்டுக்கும் சேர்த்தா?”

ஆமாம். அப்படினா ஒரு மின்னடுப்பு உருவாக்க 8000 அகும்னு வெச்சிக்குவோம்.”

அவ்வளவு கம்மியாவா ஆகும்?”

வாயிஸ் கமேண்ட் தானேடா உள்ள வைக்க போறோம்? அவ்வளவுதான் ஆகும்.”

சரி போட்டாச்சு சொல்லு.”

அப்புறம் ஷியாமளாவுக்கு.”

அவங்க ரெண்டு மூனு கருவி கேட்டிருந்தாங்கனு நெனைக்குறேன்.”

ஆமாம். பார்வையில்லாதவங்க எளிதாக விளக்கு ஏத்துற மாதிரியான ஒரு சென்சார் வெச்ச கருவி, அப்புறம் பார்வையில்லாதவங்க எழுதுற மாதிரியான அக்சசபிள் பேனா. அதுல நம்பர்ஸ் இருக்கனும். அதுவே நாம அழுத்த அழுத்த ஆல்ஃபபேர்ட்டாவும் கன்வேர்ட் ஆகனும்.”

புரியுது. அந்தக் காலத்து பேசிக் மொபைல் மாதிரி. ஆனா இதுல எல்லா மொழியையும் அடக்கமுடியாதே! இங்கிலீஷுக்குச் சரி. அப்போ தமிழுக்கு?

எண் ஒன்றை அழுத்தவும். ஏண்டா  டே. அதெல்லாம் டெவலப் பன்னிக்கலாம். இப்போதைக்கு ரெண்டுக்கும் சேர்த்து ஒரு 4000 கோடி போடு.”

“4000 கோடியா?”

ஆமாம். விளக்குக்கு 1000 கோடி பேனாவுக்கு 3000 கோடி.”

சரி அடுத்து யாருனு சொல்லு.”

அடுத்து தமிழ்மணி. கடிதம் எழுத எளிதா இருக்கிற மாதிரி. அதாவது, பார்வையில்லாதவங்களே அடுத்தவங்க உதவி இல்லாம அலைன்மெண்ட் பண்ணிக்கிற மாதிரி. எழுத்து மேடாக தெரியுற மாதிரி இருக்கனுமாம்.”

டைப்ரைட்டர்ஸ்ல கொஞ்சம் சேஞ்ச் கொண்டுவந்தா சரியா போயிடும் இல்ல?”

ஆமாம். ஒரு 200 கோடி போடு. எல்லாரும் வாங்க மாட்டாங்கல்ல. அதனால கம்மியாவே உற்பத்தி பண்ணலாம் என்று சொன்ன ஆசைத் தம்பி,

அப்புறம் பால கிருஷ்ணன். இப்போ பார்வையில்லாதவங்களுக்காகவே  பிரத்தியேகமா உருவாக்கி  இருக்கிற செயலி எல்லாம் இணைய வசதி இல்லாமலே வேலை செய்யனுமாம். அதுக்கு ஒரு 400 கோடி போட்டுக்கோ.”

ஆமாம். அது அவ்வளவு கஷ்டம் இல்ல. அடுத்து சொல்லு.”

அடுத்து மாரிக்கனி. பார்வையற்றவர்களும் பேருந்துகளை எளிதா அடையாளம் கானுற மாதிரி செயலி வேணுமாம். இதே மாதிரி பேருந்துக்காகவே நிறைய பேர் கருத்துகளைப் பதிவிட்டிருக்காங்க. நம்ம சரவணன் ஸ்டிக்கர் பாத்துதான் அவருடைய ஊருக்கான பேருந்தைக் கண்டுபிடிச்சு ஏறுவாராம். ஒருமுறை நடத்துநர் சரவணனைப் பாத்து, இதுக்கு முன்னாடி ரெண்டு பஸ் போச்சே! அதுவும் மதுரைதான போகுது. அப்புறம் ஏன் போகல?’ அப்பிடினு கேட்டாராம். மதுரை போனாலும் ஸ்டிக்கர் இல்லையே! குறை பார்வையுடைய இவருக்கு ஸ்டிக்கர்தான் அடையாளம். அதனால பஸ் மிஸ்.  அதனாலதான்  இந்தப் பிரச்சனையத் தீர்க்க ஒரு நல்ல செயலி கேட்டிருக்காங்க.”

ஏற்கனவே இருக்கே!” என்றான் நம்பி.

அது அவங்களுக்குத் தெரியாதா? இன்னும் எளிதாக் கையாளுற மாதிரி வேணுமாம். என்ன செய்யலாம்?

இது டெவலப் ஆகிடும் தம்பி. நாம ஸ்கிப் பண்ணிடலாம்.”

என்னடா அவ்வளவு ஈஸியா சொல்லிட்ட! இதுலதான் அதிக டிஸ்கஷன் போய்க்கிட்டிருந்திச்சு. செயலியைக் காட்டிலும் பேரூந்துக்கு வெளியில ஒரு அறிவிப்பு மாதிரி இருந்தா சரியாக் கண்டுபிடிக்குறதுக்கு எளிதா இருக்கும்னு நெறைய பேரு சொல்லிக்கிட்டிருந்தாங்க. பேரூந்துக்கு வெளியில அதனுடைய நம்பர் பிரெயில் மொழியில இருந்தா நல்லா இருக்கும்னு நம்மளோட இன்னொரு புதுவரவான அசோக் சொல்லியிருக்காரு. ரிசர்வேஷன் பண்ணுற பேருந்துகளில இருக்கிற இருக்கைகளிலும் இந்த பிரேயில் மொழி இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லியிருக்காங்க.”

ஆனா ரயில் பேட்டியில  எல்லாம் இருக்குல்ல பிரெயில்  மொழி?”

ஆமாம். இருக்கைக்கு மேல இருக்கும். சரி இந்தப் பேருந்து விஷயத்த என்ன பண்ணலாம்?”

அரசாங்கம் பாத்துக்கும். ஒருவேள தாமதம் நடந்தா நம்ம அப்ரோச் பண்ணி பார்க்கலாம்.”

அப்புறம் நம்ம அதே சரவணன்தான். அடுத்தவங்க உதவி இல்லாம படிவங்களை நிரப்புற மாதிரி ஏதாவது தொழில்நுட்பக்கருவி இருந்தா நல்லா இருக்குமாம்.”

இதுக்கு எனக்கு எந்த ஐடியாவும் தோனல தம்பி. பேசாம எல்லாப் படிவத்தையும் பார்வையற்றோருக்கு இணையத்துல கொடுத்துட்டா அவங்க நிரப்பிக்க மாட்டாங்க?”

எல்லாப் படிவத்தையும் இணையத்துல தரமுடியுமா?”

நிச்சயமா! இந்தப் பிரச்சனையோட தீர்வு ரொம்ப தூரத்துல இல்லனு நெனைக்குறேன்என்று சொல்லி இதற்கும்  ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் நம்பி.

அப்புறம் பாலகணேஷ் மானவர்களுக்குப் பாடம் எடுக்கும்போது வகுப்பறை பலகையில பார்வையற்றோர்களும் எழுதுற மாதிரி என்று சொல்லி முடிக்கும் முன்னமே,

கண்டுபிடிச்சிட்டாங்க. விலை அதிகம். ஆனா குறஞ்சிடும்.”

நம்பியின் இந்த பதிலிலிருந்து இதையும் அவன் தவிர்க்கிறான் என்று புரிந்தது தம்பிக்கு. அதனால் அதைப் பற்றி பேசாமல் பட்டியலில் உள்ள அடுத்த தேவைக்குச் சென்றான் தம்பி.

அடுத்து முக்கியமான மூனு தேவைகள்.”

அது என்ன முக்கியமான?” என்று நம்பி கேட்க,

நீ பாத்திருப்ப.”

நான் பாக்காமையா உன்கிட்ட வந்திருக்கு? எனக்கு நினைவு இல்ல. நீயே சொல்லு.”

தென்காசி ராயகிரியிலிருந்து பத்திரகாளினு ஒருத்தர். இன்னொரு புதுவரவு நம்பி!”

ஆமாம். புதுவரவு.”

பார்வையற்றோருக்கு உதவி செய்ற மாதிரி ஒரு ரோபோ.”

கரெக்ட். யாரோ கேட்டாங்களேனு யோசிச்சிட்டிருந்தேன். இப்போதான் நினைவுக்கு வருது. ரோபோ! நிச்சயமாச் செய்யனும். நல்லாச் செய்யனும். ஒரு ரெண்டு லட்சம் கோடி போடனும். எல்லாப் பார்வையற்றவங்களுக்கும் கொடுக்கனும்.”

சூப்பர். அப்புறம் நம்ம ராஜா. என்னதான் நல்ல நிலையில இருந்தாலும், அடுத்தவங்க உதவி பொது இடங்கள்ல தேவைப்படுறதுனாலயே பார்வையற்றோருடைய சுயமரியாதை ரொம்பப் பெரிய அளவில  பாதிக்கப்படுரதாவும், அதனால எல்லாப் பார்வையற்றவங்களும் பக்கத்துல இருக்கிற பொருள் தடை மற்றும் வழி எல்லாத்தையும் யாருடைய உதவி இல்லாமலும் அடையாளம் கண்டுபிடிக்குற மாதிரி ஒரு கருவி நிச்சயமா வேணும்னு கேட்டிருக்காறு. அதனால் அதுக்கொரு 100000 கோடி

நிச்சயமா. இது சம்மந்தமாக் கருவிகள் உருவாக்கப்பட்டுக்கொண்டு இருந்தாலும் நாமளும் முயற்சி செய்யனும்னு நெனைக்குறேன்.”

ஆமாம் நம்பி. அப்புறம் கடைசியா ஒருத்தர் சொல்லியிருக்காரு. இதைத்தான் எல்லாத்தையும்விட ஹைலைட்டா நான் பாக்குறேன்.”

அடே! என்னுடைய லிஸ்ட வாங்கிட்டு எதுக்குடா எனக்கே சஸ்பன்ஸ் வைக்குற?” என்று கேட்ட நம்பி தானாகவே தொடர்ந்தான்.

சௌண்டப்பன் அப்படினு ஒருத்தர். இந்த உலகத்துல பார்வையின்மையே இருக்கக்கூடாது. எல்லோரும் எல்லாத்தையும் பார்க்கணும். அதுக்கு மருத்துவ ரீதியான தொழில் நுட்பம் வளரனும்.  அப்படின்னு சொல்லியிருக்காரு. சரியா! எனக்கு ஞாபகம் இருக்கு.”

இதுக்கு நாம என்ன பண்ணமுடியும் நம்பி?”

நம்மால எதுவும் பண்ண முடியாது. ஆனா அரசாங்கங்கள் நெனச்சா வெறும் பணத்துக்கு மட்டுமே ஆசைப்படாத நல்ல கண் மருத்துவர்களை கண்டுபிடிச்சு,  இதற்கான ஆராய்ச்சியில இறக்கி, அதற்கு நிதி உதவியும் செய்யலாம் என்று நம்பி சொல்ல இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர்.

 

graphic கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன் அவர்களின் படம்
கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன்

 (கட்டுரையாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுகிறார். ).

slvinoth.blogspot.com   என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்)

தொடர்புக்கு: slvinoth91@gmail.com   

 

 

1 கருத்து:

  1. எல்லாருகிட்டயிருந்து வாங்குற கருத்துக்கள connect பன்றவிதந்தா உங்களோட எழுத்துநடையோட ஹயிலைட். தொடரட்டும்.
    பேச்சுநடையில இருக்குறதுனால படிக்க படிக்க இன்டெரெஸ்ட்டா இருக்கு.

    பதிலளிநீக்கு