அறிவிப்புகள்

வானொலி நினைவலைகள்

புதுப்புது தொழில்நுட்பங்களில் தடம் பதித்து வாசகர்கள் மனதில் இடம்பிடிக்கும் விரல்மொழியர் மின்னிதழ்! கிளப்ஹவுஸ்-இல் தனது முதல் கூடுகையை வானொலி நினைவலைகள் என்னும் தலைப்பில் 19/6/2021  சனிக் கிழமை அன்று காலை 11 மணி அளவில் ஏற்பாடு செய்திருந்தது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் சிறப்பிக்க கூட்டம் சிறப்பாய் நடைபெற்றது.

 

தமிழ் திரைப்படங்களில் ஒலி விவரணை

பார்வையற்றோரால் தொடங்கப்பட்ட முதல் தமிழ் கிளப் ஹவுஸ்அரங்கமான விரல்மொழியர் ’தமிழ் திரைப்படங்களில் ஒலி விவரணை’ எனும் தலைப்பில் 27/06/2021 ஞாயிறு காலை பதினோரு மணிக்கு ஒரு கூடுகையை ஏற்பாடு செய்திருந்தது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கண்ணன் மற்றும் பாண்டிச்சேரி கண்ணன் இருவரும் கருத்தாளர்களாக அலங்கரிக்க, சிறப்பு அழைப்பாளர்களாக வாசகர்ககள் சிறப்பிக்க, ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்த நாளில் பொழுதுபோக்குச் சமத்துவம் குறித்து உரையாடினார்கள்.

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ஒலி விவரணை முறை தமிழ் திரைப்படங்களில் எவ்வாறு கையாளப்படுகிறது? இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து கூடுகையில் விரிவாகப் பேசப்பட்டது.

நிகழ்வைக்கான இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.

விரல் மொழியர் கிளப் ஹவுஸ் அரங்கில் இணைந்துகொள்ள

இந்த

 இணைப்பைச் சொடுக்குங்கள்.

 

மணமேடை

மணமகன்/மணமகள் தேவை பகுதியில்  தங்களின் துணையை கண்டறிய விரும்பும் நபர்கள் கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உன்மையான பதிலை நிறப்பி

viralmozhiyar@gmail.com

என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

அல்லது

9894335053

என்கிற அலைபேசி எண்ணில் விரல்மொழியர் ஆசிரியர் குழுவிலிருக்கும் திரு. பாலகணேசன் அவர்களை அழைத்து தங்களின் விவரங்களை தெரிவிக்கலாம்.

 

படிவத்தில் இடம்பெற்றிருக்கும் கேள்விகள்:

1. பெயர்:

2. தேவை: மனமகன்/மகள்

3. வயது:

4. பார்வையின்மை விழுக்காடு:

 

5. மதம்:

6. ஜாதி: [உட்பிறிவோடு]

7. குடும்ப உறுப்பினர்களின் விவரம்

8. கல்வி தகுதி:

 

9. படித்த பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் தங்கியிருந்த விடுதிகள்.

10. பணியில் இருப்பவரா? ஆம்/இல்லை

11. பணிபுறியும் நிறுவனம்

12. மாத ஊதியம்

 

13. தங்களை பற்றிய வேறு ஏதேனும் விவரங்கள்

14. எதிர்ப்பார்க்கப்படும் வயது வரம்பு

15. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா? ஆம்/இல்லை

16. எதிர்ப்பார்க்கப்படும் ஜாதி மற்றும் மதம்

 

17. திருமணம் செய்துகொள்ள விரும்புவது: முழுப்பார்வையற்றவர்/ குறைபார்வையுடையவர்/ பார்வை உள்ளவர்

18. தேவை: அரசுப்பணியில் இருப்பவர்/ பணிவாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்/ தனியார் துறையில் பணிபுறிபவர்

19. தற்பொழுது வசித்துவரும் வீட்டின் முழுமையான முகவரி:

20. பணிபுறியும் இடத்தின் முழுமையான முகவரி.

 

21. சரியான தொலைபேசி எண்

22. மின்னஞ்சல் முகவரி.

 

பின் குறிப்பு:

1.       மனமகன்/மனமகள் தேவையுள்ளவர்களை இணைப்பதுமட்டுமே விரல்மொழியரின் நோக்கம்.

2.       தங்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அலைபேசி எண் உட்பட தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுகிறது இதனால் ஏற்படும் அசவுகரியங்களுக்கு விரல்மொழியர் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல.

இந்த பகுதியில் இடம்பெறும் மனமகன்/ மனமகள் பற்றிய விவரங்களை தேவைப்படுபவர்கள் கவனமாக சரிபார்த்துக்கொள்ளவேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக