R. குருசாமி
பத்து மாதம் சுமந்து என்னைப்
பெற்றெடுத்த தாயே! - உன்
வயிற்றில் நான் இருக்கையிலே
துடிதுடித்தாயோ?
தொல்லைகள் அடைந்தாயோ?
என்னவென்று நான் அறியேன்;
ஒன்று மட்டும் நான் அறிவேன்;
உள்ளத்திலெ துணிவும்,
மனதிலே திடமும்,
என் மீது அன்பும்,
பாசமும் கொண்டவலாக
இருக்கிறாய் நீ.
கடவுளை விடவும் உயர்ந்தவள் நீ;
நித்தமும் என்னை நினைப்பாய்,
நித்திரையிலும் எனை மறவாய்;
தாயே! உன் வாழ்வை
எனக்காக அற்பணித்தாய்.
அற்புதமான பூவுலகில்
பொக்கிஷமாய் நீ கிடைத்தாய்;
உன் பாசமே என் உயிர்க் கவசம்.
அர்ஜுனனின் வில்லில் இருந்து கிலம்பி
எதீரிகளை வீழ்த்தும் அம்பாய்,
என் மீதான உனது அன்பு;
எனை ஏற்றம் பெற வைத்த
நல் இதயமே!
உன்னில் சிறு துன்பத்தைக் கண்டாலும்
சிதைந்து போகும் என் உள்ளம்;
உன் சிரிப்பின் ஒலி
என் வாழ்வின் ஒளி.
ஆழ்கடலில் இருந்து எழும் அலை
வானை முட்டும்,
தடைகளைத் தகர்த்தெறியும்,
தன்னோடும் இழுத்துக்கொள்ளும்;
அதுபோல்தான் நீயும்
எனக்கு வந்த துன்பங்களைத்
தடுத்து ஆட்கொண்டதோடு,
உன்னை அவை தாக்கும்போதும்
புன்முறுவல் பூக்கின்றாய்.
விருட்சத்தின் இலையானது,
விருட்சத்திற்கே சொந்தம்;
அம்மா உன் அன்பானது,
எனக்கெ சொந்தம்.
அம்மா உன் அன்பானது
வின்னை முட்டி,
மன்னைப் பிளந்து,
ஓங்கி உயர்ந்த மரத்தைப் போல
என்னில் நிலையாக இருக்கிறது.
***
(கவிஞர் மதுரை சுந்தரராஜன் பட்டியில் உள்ள IAB பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளியின் 12-ஆம் வகுப்பு மாணவர்)
பத்து மாதம் சுமந்து என்னைப்
பெற்றெடுத்த தாயே! - உன்
வயிற்றில் நான் இருக்கையிலே
துடிதுடித்தாயோ?
தொல்லைகள் அடைந்தாயோ?
என்னவென்று நான் அறியேன்;
ஒன்று மட்டும் நான் அறிவேன்;
உள்ளத்திலெ துணிவும்,
மனதிலே திடமும்,
என் மீது அன்பும்,
பாசமும் கொண்டவலாக
இருக்கிறாய் நீ.
கடவுளை விடவும் உயர்ந்தவள் நீ;
நித்தமும் என்னை நினைப்பாய்,
நித்திரையிலும் எனை மறவாய்;
தாயே! உன் வாழ்வை
எனக்காக அற்பணித்தாய்.
அற்புதமான பூவுலகில்
பொக்கிஷமாய் நீ கிடைத்தாய்;
உன் பாசமே என் உயிர்க் கவசம்.
அர்ஜுனனின் வில்லில் இருந்து கிலம்பி
எதீரிகளை வீழ்த்தும் அம்பாய்,
என் மீதான உனது அன்பு;
எனை ஏற்றம் பெற வைத்த
நல் இதயமே!
உன்னில் சிறு துன்பத்தைக் கண்டாலும்
சிதைந்து போகும் என் உள்ளம்;
உன் சிரிப்பின் ஒலி
என் வாழ்வின் ஒளி.
ஆழ்கடலில் இருந்து எழும் அலை
வானை முட்டும்,
தடைகளைத் தகர்த்தெறியும்,
தன்னோடும் இழுத்துக்கொள்ளும்;
அதுபோல்தான் நீயும்
எனக்கு வந்த துன்பங்களைத்
தடுத்து ஆட்கொண்டதோடு,
உன்னை அவை தாக்கும்போதும்
புன்முறுவல் பூக்கின்றாய்.
விருட்சத்தின் இலையானது,
விருட்சத்திற்கே சொந்தம்;
அம்மா உன் அன்பானது,
எனக்கெ சொந்தம்.
அம்மா உன் அன்பானது
வின்னை முட்டி,
மன்னைப் பிளந்து,
ஓங்கி உயர்ந்த மரத்தைப் போல
என்னில் நிலையாக இருக்கிறது.
***
(கவிஞர் மதுரை சுந்தரராஜன் பட்டியில் உள்ள IAB பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளியின் 12-ஆம் வகுப்பு மாணவர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக