தொடர்: அரசியலில் நாம்-7


ரா. பாலகணேசன்

பார்வையற்ற அரசியலாளர்களை அறிமுகப்படுத்தும் இத்தொடருக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி. இந்த இதழில் நாம் சந்திக்கவிருக்கும் அரசியலாளர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பேச்சாளர் திரு. செல்லமுத்து அவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் புளியூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நல்லதங்காள் பட்டி என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் செல்லமுத்து. பிறந்த ஊரிலேயே இன்னும் வசிக்கும் இவர், .தி.மு.. பேச்சாளராக, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினராக, சமூக சேவகராக அவ்வூர் மக்களால் அறியப்படுகிறார்.

இளமைக் காலம்
எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், பிறவியிலேயே தனது பார்வையை இழந்தார். ஏற்கெனவே இரரது அக்காவும் பார்வையற்றவர். தனது தொடக்கஅக் கல்வியைப் புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளியிலும், 8-ஆம் வகுப்பு வரை தஞ்சை அரசு பார்வையற்றோர் பள்ளியிலும் படித்தார்.  தொடர்ந்து +2 வரை பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியில் பயின்றார். பள்ளிக் காலத்திலேயே மாணவர்களுக்குத் தேவையான உரிமைகளைப் போராடிப் பெற்றுத்தரும் முனைப்பு உள்ளவராகத் திகழ்ந்திருக்கிறார். தற்போது ரயிலில் காற்றுத் தலையணை வியாபாரம் செய்துவருகிறார்.

அரசியல் பயணத்தின் தொடக்கம்
1996-ஆம்  ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில்புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தொகுதியில் தி.மு.. வேட்பாளராகப் போட்டியிட்ட கவிதைப்பித்தன் அவர்களுக்குத் தன்னார்வமாய்ச் சென்று வாக்கு கேட்டிருக்கிறார். அப்போது 7-ஆம் வகுப்பு படித்துகொண்டிருந்த இவரது பேச்சாற்றல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக, திரு. கவிதைப்பித்தன் அவர்கள்மாண்புமிகுஆன பிறகு அவ்வூருக்கு நன்றி தெரிவிக்க வந்தார். அப்போது செல்லமுத்து அவர்களைப் பாராட்டி பொன்னாடை போர்த்திவிட்டு, தன் வீட்டிற்கு வரவேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக கவிதைப்பித்தனின் செல்லப்பிள்ளையானார் செல்லமுத்து. அவரது வீட்டிலும், சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையிலும் தடையின்றிச் செல்லும் நபரானார். அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்த இவரைக் கவிதைப்பித்தனுடனான நட்பு பண்படுத்தியது.

சமூகப் பணி
இதற்கிடையில், ‘வளர்பிறை மக்கள் நற்பணி மன்றம்என்ற பெயரில் தன் கிராம மக்களுக்குத் தேவையான பல வசதிகளை இளைஞர்களின் துணையோடு பெற்றுத்தந்தார். முக்கிய அலுவலர்களை அழைத்து வந்து, கூட்டங்கள் நடத்தி, அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

.தி.மு..வில் இணைந்தார்
2001 சட்டமன்றத் தேர்தலில் கவிதைப்பித்தனுக்குதொகுதி கிடைக்கவிலை. வருந்தினார் செல்லமுத்து. அவர் வார்த்தைகளிலேயே கூறுவதானால்,
கவிதை அண்ணனுக்காகத் தான் நான் கட்சியில இருந்தேன். அவருக்கே தொகுதி தரல. அதோட, தி.மு.. வாய் வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாத்துற கட்சின்னு அப்ப எனக்குத் தோணிச்சு. .தி.மு. மேல நல்ல அபிப்பிராயமும் வந்துச்சு. .தி.மு..வுல சேர்ந்துட்டேன். இடையில் நண்பரின் ஆலோசனையின் பேரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருக்கிறார். அக்கட்சியின் செயல்பாடுகளில் சுணக்கம் இருந்ததாகக் கருதிய இவர், .தி.மு..வில் இணைந்தார்.
2001-இல் அதே குளத்தூர் தொகுதியில் .தி.மு. வேட்பாளராக நிறுத்தப்பட்ட பேராசிரியை கருப்பாயி அவர்களுக்கு வாக்கு சேகரிக்கத் தொடங்கினார் செல்லமுத்து.

ஊராட்சி மன்ற உறுப்பினர்
2006-2011 காலகட்டத்தில் புளியூர் ஊராட்சி மன்ற உறுப்பினராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பணிக்காலத்தில் அடிகுழாய்கள் அமைத்தது, அங்கன்வாடி மையம் திறக்க ஏற்பாடு செய்தது, தொலைபேசி வசதியை ஊருக்கு முதல் முறையாகக் கொண்டுவந்தது முதலிய  பணிகளால் சாதாரண மக்களும் இன்னும் பயனடைகின்றனர் என்று பெருமிதமாகச் சொல்கிறார் செல்லமுத்து.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு
2016-இல் நிகழ்ந்த ஜெயலலிதாவின் மரணம் .தி.மு. கட்சியை வெகுவாக பாதித்தது என்பது நாம் அறிந்ததே. 2017 பிப்ரவரியில் O.  பன்னீர்செல்வம் தொடங்கிய தர்ம யுத்தத்திற்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார் செல்லமுத்து. நேரடியாகச் சென்று O.P.S அவர்களுக்குப் பொன்னாடை போத்தி, வாழ்த்தி தன் ஆதரவைத் தெரிவித்ததை நினைவுகூர்கிறார். மீண்டும் அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் இணைந்த பிறகு இவரும் கழகத்தில் கலந்துவிட்டார்.
ஆனாலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தான் பரப்புரை செய்யவில்லை என்கிறார் இவர். காரணம், ஆளும் .தி.மு. அரசு பா.. ஆளும் மத்திய அரசிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டது என்கிறார்.

கட்சிப் பணி
.தி.மு. கொள்கை பரப்புச் செயலாளராக திரு. O.S. மணியன் இருந்தபோது தனக்குப் பேச்சாளருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகக் கூறுகிறார் செல்லமுத்து. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னை அங்கீகரித்து வளர்த்தவர்களில் முக்கியமானவர் என்கிறார். கட்சிக் கூட்டங்களில் இப்போது பார்த்தாலும் தன்னை அடையாளம் கண்டுகொண்டு பேசுவார் என்கிறார். மேலும், கட்சியின் தலைமைக் கழகச் செயலாளர் மகாலிங்கம், பாலகங்கா, சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், பே்ராசிரியை கருப்பாயி முதலியோர் தன்னை அங்கீகரித்து வாழ்த்துபவர்களில் முக்கியமானவர்கள் என்கிறார்.

இவரிடம் நாம் முன்வைத்த சில கேள்விகளுக்கான பதில்கள்
கேள்வி: அரசியலில் நீங்கள் சாதிக்க விரும்புவது?
பதில்: பார்வையற்றவர்களுக்கு என்னால் முடிந்த பணிகளைச் செய்யவேண்டும். அதற்கு அரசியல் தொடர்பு ஒரு கருவியாக இருக்கவேண்டும். எந்தக் கட்சி அதிகாரத்தில் இருந்தாலும், அந்தக் கட்சியில் இருக்கும் பார்வையற்றவர்களுடன் இணைந்து நம்மவர்களுக்காகப் பணி செயத் தயாராக இருக்கிறேன்.
கே: அரசியலில் மிரட்டல்கள் இயல்பானவை. நீங்கள் மிரட்டல்களைச் சந்தித்திருக்கிறீர்களா?
: ஊராட்சி மன்ற உறுப்பினராக இருக்கும்போது உள்ளூர் தி.மு.கவினரால் மிரட்டப்பட்டிருக்கிறேன். என்னிடம் வந்து அவர்கள் மிரட்டுவதில்லை. என் அம்மாவிடம் சொல்வார்கள். “உங்க பையனைப் பாத்துக்கோங்க. இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லுங்க. இல்லைன்னா உங்களுக்கும்தான் பிரச்சனை வரும்என்று சொல்வார்கள். அம்மா மிகவும் வருத்தப்படுவார்.

கே: ஊராட்சி மன்ற உறுப்பினராக நீங்கள் சாதித்தது?
: நான் 2006-இல் பொறுப்பேற்ற வரை  எங்கள் ஊருக்கு தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் ஒரு வீடு கூட ஒதுக்கப்படவில்லை. நான் கிராமசபை கூட்டத்தில் கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில் பஞ்சாயத்து ஒன்றியத்தின் முயற்சியில் 25 தொகுப்பு வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஒழுகிய வீடுகளில் இருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சோடு இப்போது வாழ்ந்துவருகிறார்கள்.
கே: ஊராட்சி மன்ற உறுப்பினராக இருக்கும்போது பார்வையின்மை காரணமாக ்வருத்தமடைய நேர்ந்ததுண்டா?
: உண்டு. நான் கூட்டங்களுக்குச் செல்லும்போது என்னோடு வரும் துணையாட்களைஅவரை விட்டுவிட்டுப் போங்க. தொடர்ந்து கூட்டிட்டுப் போகாதீங்கஎன்று சைகையில் சொல்வார்கள். பிறகு பல நேரங்களில் நான் தனியாளாக வெண்கோலின் துணையோடு ஊராட்சி மன்ற அலுவலகம் சென்றிருக்கிறேன். அங்கிருக்கும் எழுத்தரை குளிர்வித்து தான் என்னால் பல காரியங்களைச் சாதிக்கமுடிந்தது.

கே: அரசியலில் பார்வையின்மை காரணமாக புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்திருக்கிறீர்களா?
: பல முறை உணர்ந்திருக்கிறேன்.
கே: நம்மவர்கள் ஏன் அரசியலில் பங்கேற்பதில்லை?
: நாம் பாதுகாப்பான வேலையையே விரும்புகிறோம். அரசியல் என்பது பொருளாதார உத்திரவாதம் தரும் பணியல்ல. மேலும், நிறைய அவமானங்களையும், தோல்விகளையும் சந்திக்க நம்மவர்கள் தயாராக இல்லை. எல்லாவற்றையும் விட, பார்வையுள்ள பெரும்பான்மையினரைத் தாண்டி அரசியலில் ஜொலிப்பது கடினம். அதனால்தான் பெரும்பாலும் யாரும் பார்வையற்றவர்கள் அரசியலுக்குள் வருவதில்லை.

கே: அரசியலில் பார்வையற்றவர்கள் பங்கேற்க உங்கள் ஆலோசனை என்ன?
: கள அரசியலில் பார்வையற்றவர்கள் செயல்பட விரும்பினால் அவர்கள் குறைந்தது 10 பேருக்காவது வேலை தரும் நிலையில் இருக்கவேண்டும். அப்படியென்றால்தான் அவரை நம்பி ஒரு சிறிய குழுவாவது இருக்கும். என்னிடம் அத்தகைய செயல்பாடு இல்லாதது சிரமமாகத்தான் இருக்கிறது. பொதுவாகவே அரசியலில் உடன் வருபவர்களுக்குச் செலவழிக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. பார்வையற்றவர்களின் நிலையை நீங்கள் அறிவீர்கள். எப்போதும் தன்னுடன் வருபவர்களுக்குச் செலவழிக்கவேண்டும்; எப்போதும் எவரையேனும் சார்ந்தே இருக்கவேண்டும். இதனால்தான்  சொல்கிறேன். அரசியல் பணிக்கு வர விரும்பும் பார்வையற்றவர்கள் முதலில் பொருளாதார பலம் பெற்றிருக்கவேண்டும்.

கே: பார்வையற்றவர்களை அரசியலில் வெற்றி பெற வைக்க என்ன செய்யவேண்டும்?
: பார்வையற்றவர்களுக்கு உங்களைப் போன்றவர்கள் நிறைய விழிப்புணர்வு தரவேண்டும். பார்வையுள்ளவர்கள் நம் அரசியல் அறிவை நிச்சயம் அங்கீகரிப்பார்கள். நம்மால் செயல்பட முடியுமா என்பதில்தான் அவர்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. நாம் அந்தச் சந்தேகத்தைப் போக்கவேண்டும். மாதிரிச் சட்டமன்றங்களைப் பொதுத் தளங்களில் நாம் நடத்தவேண்டும். நீங்கள் எங்களிடம் பேட்டி எடுப்பதைப் போல அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேட்டி எடுக்கலாம். அவர்கள் பார்வையற்றோர் குறித்து என்ன கருத்து வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பார்வையற்றோர் சட்டமன்றத்தில் செயல்பட முடியும் என்று கருதுகிறீர்களா என்று அவர்களிடம் கேள்வி கேட்கலாம். இப்படி நாம் நிறைய விழிப்புணர்வைப் பார்வையுளவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும். நம்மவ,ர்களும் மக்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருக்கவேண்டும். நம்மிடையே ஒற்றுமை வேண்டும். மிகப்பெரிய வாக்கு வங்கியின் தலைவர்களைக் கட்சியினர் அங்கீகரிக்கத்தானே செய்வார்கள். நாமெல்லாம் இணைந்து மிகப்பெரிய வாக்கு வங்கியாகி, நம் தலைவரை பொது அரசியலுக்கு அனுப்பலாம். அத்தகைய தலைவர்களை நாம் இனங்காணவேண்டும்.

கே: ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய .தி.மு. எப்படி இருக்கிறது?
: ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோவில் இருந்தபோதே இவர்கள் யாரும் உண்மையான விசுவாசிகளாக இல்லை. ஒருவர் கூட மருத்துவமனை நிகழ்வுகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துபவராக இல்லை. ஆனாலும், கட்சி காப்பாற்றப்படவேண்டும். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என்னுடைய இந்த அரசியல் அடையாளத்தில் ஏதாவது செய்துகொண்டிருக்கவேண்டும் என்ற அடிப்படையில் நான் தொடர்ந்து கட்சியில் இருக்கிறேன். அதிலும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளோடு மிகுந்த நட்பு பாராட்டுபவராக, அக்கறை உள்ளவராக இருக்கிறார்.
கே: .தி.முக.வின் எதிர்காலம் யார் கையில்  இருக்கும் என நினைக்கிறீர்கள்?
: அது 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும். இப்போது அதிகாரம் இருப்பதால் கட்சி அமை்தியாக இருக்கிறது. 2021 தேர்தலின்போதே கட்சி பிளவுகளைச் சந்திக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

கே: தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து..
: 2016 தேர்தலில் .தி.மு.  வெற்றி பெற்றவுடன் நான் நண்பர்களிடம் சொன்னேன். “இதுவரை அம்மா ஆட்சி நடைபெற்றது; இனிமேல் அதிகாரிகளின் ஆட்சிதான் நடைபெறும்என்று. அதுதான் நடக்கிறது. அப்போதே ஜெயலலிதா அவர்களுக்கு உடல் நிலை சரிய்யில்லாமல் இருந்ததால் அப்படிச் சொன்னேன். அதற்குப் பிறகு நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன.
கே: தி.மு..விலிருந்து வெளியேறிய பிறகு கவிதைப்பித்தன் அவர்களைச் சந்தித்திருக்கிறீர்களா?
: ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அண்ணனுக்கு என் மீது அதிக வருத்தம். 2004-இல் தி.மு. பொதுச்செயலர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பிறந்தநாள் விழா அண்ணா அறிவாலயத்தில் கொண்டாடப்பட்டது. அங்கே அண்ணன் கவிதை வாசித்தார். அதைக் கேட்கத்தான் நான் அங்கே சென்றிருந்தேன். அண்ணன் கவிதை வாசித்த பிறகு நான் மேடைக்குச் சென்று அவருக்கு மரியாதை செய்யச் சென்றேன். ஆனால் அவர், என்னைப் பார்த்ததும் பின்வாங்கிவிட்டார்.
ஒரு நல்லவரை வருத்தப்பட வைத்துவிட்டேனே என்று நான் இன்னும் புழுங்கிக்கொண்டிருக்கிறேன். அற்பத்தனமாக முடிவெடுத்துவிட்டேனோ என்று கூட சில நேரங்களில் யோசித்ததுண்டு. அண்ணனோடு இருந்தால் தி.மு..வில் எனக்குக் கொஞ்சம் நல்ல முகவரி கிடைத்திருக்கும். இல்லையென்றாலும், “தம்பி, உன்னை நல்லாப் படிக்கவச்சு IAS ஆக்குறேன்என்றார். அத்தகையவரை நான் வருத்தமடைய வைத்துவிட்டேன்.

இவரைத் தொடர்புகொள்ள: 7695017500

வாசகர்களே!
உங்களுக்குத் தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக