உரிமை: அரசு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் பார்வையற்றோருக்கான இட ஒதுக்கீடு - முனைவர் ம. சிவக்குமார்

graphc rights of persons with disabillities ACT 2016 என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் இடம்பெற்றதோடு பல வித மாற்றுத் திறனாளிகளின் படங்களும் உள்ளன

        உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனித குலத்தின் அடிப்படைத் தேவைகளாக உள்ளன. இவற்றை அடைவதற்காக மனிதன் உழைப்புஎன்ற வழியைத் தேர்ந்தெடுத்து அதன் மூலமாக தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறான். உழைப்பினை எங்கு பயன்படுத்திப் பொருளை எவ்வாறு ஈட்டுவது என்பது பொதுவாகவே சிக்கலாக உள்ளது; இது பார்வையற்றவர்களுக்கு மிகவும் கடினமாகவே உள்ளது. தற்போதைய போட்டிநிறைந்த உலகில் சுயதொழில், தனியார் பணி, அரசுப்பணி என்பனவற்றில் எந்தப்பணி நிலையான பணி என்ற தேடலில்  அரசுப்பணியைத் தேர்ந்தெடுக்க இளைஞர்கள் விரும்புகின்றனர்.

அனைவருக்கும் அரசுப் பணி:
      கலப்புப் பொருளாதாரம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் அனைவருக்கும் அரசுப்பணி என்பது இயலாத ஒன்றே. இந்தியாவில் பெரும்பான்மையாக விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளதுஅத்தொழிலை மேலும் வளர்க்கத் தேவையான வழிமுறைகளைக் கையாளவேண்டும்.   தற்போது அரசு அதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லைமாறாக, அன்னியத் தொழில் முதலீடு மற்றும் விவசாயப் பொருளாதாரத்தை மாற்றுதல் போன்ற அரசின் தவறான கொள்கையினால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர்; பார்வையற்றோரின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது; சுயதொழில், தனியார் பணி, ஆகியவை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் நிலைத்து நிற்க இயலாத நிலை உள்ளது.
      இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 ‘சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று குறிப்பிடுகிறதுஅதாவது, இந்திய நாட்டு எல்லைக்குள் எந்த நபரின் சமத்துவத்தையும் சட்டத்தின் முன் நிராகரிக்கக் கூடாது; சட்டத்தின்முன் அனைவரும் சமம்; சட்டங்களினால் சமமான பாதுகாப்பை வழங்கவேண்டும்
”The State shall not deny to any person equality law. before the law or the equal protection of the laws within the territory of India.”          
      இச்சட்டத்தின் பிரிவு 16 இல் அரசு வேலைவாய்ப்பு என்ற பிரிவில் ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. உட்பிரிவு 2 இன் கீழ் சொல்லப்பட்டவற்றோடு மாற்றுத்திறனாளிகளையும் சேர்த்திருந்தால் நமக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை 1950 இல் இருந்தே  கிடைத்திருக்கும்.
 “16. (1) There shall be equality of opportunity for all Equality of citizens in matters relating to employment or appointment — opportunity in to any office under the State, matters of public employment.
(2) No citizen shall, on grounds only of religion, race, caste, sex, descent, place of birth, residence or any of them, be ineligible for, or discriminated against in respect of, any employment or office under the State.”  
      இதில் பிரிவு இரண்டில் மாற்றுத்திறனாளி என்று  குறிப்பிடப்படாததால் நமக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அதே வேளையில்,  சமூக பாதுகாப்பு தேவைப்படும் பிரிவினராக மாற்றுத்திறனாளிகளை இச்சட்டப் பிரிவு 243 குறிப்பிடுகிறது. இப்பிரிவு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கல் பற்றியது. அதில் பட்டியல் 12  -இல் கூறப்பட்டவை குறித்துத் திட்டமிடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
      பட்டியல் 12-இல், பாதுகாக்கப்படவேண்டிய சமூகத்தில் பின்தங்கியவர்கள் வரிசையில் ஊனமுற்றோரும்,  மனநலம் குன்றியோரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். எனவே கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் மாநில அரசு முன்னுரிமையையோ, இட ஒதுக்கீட்டினையோ  வழங்கவேண்டிய கட்டாயம் இல்லை, அவை முழுமையாக வழங்கப்படவுமில்லை. அதனால் அவற்றை அளிப்பதற்குச் சிறப்புச் சட்டங்கள் தேவைப்படுகின்றன. 
மாற்றுத்திறனாளிகளுக்குரிய சட்டங்கள்:
      தமிழ்நாடு அரசு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் அரசாணை 602- 1981 இல் வெளியிட்டதுஅதன்படி அரசு, அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து அமைப்புகளிலும் மூன்று சதவீத இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்அவ்வாணையினால் பார்வையற்றோர், வாய் பேச இயலாதோர் மற்றும் காது கேளாதோர், கை கால்  இயலாதோர் ஆகியோருக்கு  கல்வி, வேலைவாய்ப்பில் தலா ஒரு சதவீதம் என்று இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை அடுத்து அதே துறையில்  அரசாணை 99/1988 இல் வெளியிடப்பட்டது.   அதன்படி, அரசுப் பணிகளில் தொகுதி C மற்றும் D-யில் உள்ள  அனைத்துப் பணிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாளம் காணப்பட்ட பணிகளாக அறிவிக்கப்பட்டனஅவ்வாணையினால் பார்வையற்றோர் அரசுப் பணிகளில் முதல்முறையாக பணியமர்த்தப்பட்டனர். பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தொடர் போராட்டங்களினால் சிறப்பு ஆணைகள்மூலம் பள்ளி ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர் போன்ற பணிகளில் பார்வையற்றவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.   ஆனால், அதிகாரம் மிக்க நிர்வாகப் பணிகளான தொகுதி A மற்றும்பணிகளில் பார்வையற்றவர்கள் பணியமர்த்தப்படவில்லை.  
      மைய அரசு 1995 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளின் சமவாய்ப்பு, உரிமைப் பாதுகாப்பு, மற்றும் முழு பங்கேற்புச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பினை உறுதிசெய்யும் பிரிவுகள் இடம்பெற்றிருந்தன. 1996 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இச்சட்டத்தில் பிரிவு 32 மாற்றுத்திறனாளிகளுக்கான பணிகள் அடையாளம் காணப்படவேண்டும், அவை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வுசெய்யப்பட்டு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பக் ்கூடுதலாகப் பணியிடங்கள் அடையாளம் காணப்படவேண்டும் என்று குறிப்பிட்டது. இதன்படி,  2005 ஆம் ஆண்டு மைய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் தொகுதி A மற்றும் B பணிகளை அடையாளம் கண்டு ஆணைகள் வெளியிட்டனஅதாவது சட்டம் நடைமுறைக்கு வந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு பார்வையற்றவர்களுக்கு நிர்வாக உயர்பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இச்சட்டப்பிரிவு 33 அரசுப் பதவிகளில் மூன்று சதவீதத்திற்குக் குறையாமல் மாற்றுத்திறனாளிகளுக்குப் பணி வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிடுகிறது. அப்படி என்றால் மூன்று சதவீதத்திற்கு மேல் எவ்வளவு வேண்டுமென்றாலும் வழங்கலாம்.  
      அப்படி எதுவும் நடக்கவில்லைமாறாக முழுமையாக இப்பிரிவு அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லைமேலும் அடையாளங்காணப்பட்ட பணிகளுக்குமட்டுமே 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கில் பணியிடங்கள் நிரப்பப்பட்டாலும், ஐந்து முதல் பத்து பணிகள் மட்டுமே பார்வையற்றவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றனஇது அரசு இயற்றிய சட்டத்தை அரசே மீறுவதாக உள்ளது.    
      இந்தச் சூழலில் மைய அரசை எதிர்த்து NFB தில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் அரசினைக் கண்டித்தனர்.   மேலும் PWD ACT 1995  சட்டப்பிரிவு 32,  33  ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் படிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.  
      இதனை எதிர்த்து மைய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததுஅவ்வழக்கின் தீர்ப்பு 08-10-2013 அன்று வழங்கப்பட்டதுஅதில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதிசெய்தும், மேல்முறையீட்டினைத் தள்ளுபடி செய்தும் ஆணையிட்டதுஅதில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய இட ஒதுக்கீட்டைக் கணக்கிடும்போது தொகுதி A, B, C, D ஆகியவற்றில் பணிகளுக்கேற்ப இடங்களைக் கணக்கிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது உச்சநீதிமன்றம்மேலும் இரண்டாயிரத்தைந்தில் வெளியிடப்பட்ட ஆணையைத் தடைசெய்தும், தொடர்புடைய அரசுகள்  புதிய ஆணையை வெளியிடவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. 
“51) Thus, after thoughtful consideration, we are of the view that the computation of reservation for persons with disabilities has to be computed in case of Group A, B, C and D posts in an identical
manner viz., “computing 3% reservation on total number of vacancies in the cadre strength” which is the intention of the legislature. Accordingly, certain clauses in the OM dated 29.12.2005, which are contrary to the above reasoning are struck down and we direct the appropriate Government to issue new Office Memorandun((s) in consistent with the decision rendered by this Court.”
      இப்பத்தியை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லைமாறாக பத்தி 54-இன் வாசகங்களை ஆணையாக வெளியிட்டுள்ளது.   பத்தி 51 அமல்படுத்தப்பட்டிருந்தால் அனைத்துத் துறைகளிலும் ஆணையர், இயக்குநர் முதலான அனைத்துப் பணிகளிலும் பார்வையற்றவர்கள் பதவியில் இருந்திருப்பார்கள்.   அரசு சட்டம் யற்றினாலும், நீதிமன்றம் ஆணையிட்டாலும், அதிகாரிகளின் அதிகாரத்தால் நம் உரிமைகள் முடக்கப்படுகின்றன என்பது இதிலிருந்து  தெளிவாகிறது. அதைத் தடுக்க நம்மிடம் சட்டமில்லை. 
      ஆனால், தவறு செய்யும் அதிகாரிகளைத் தண்டிக்க பின்வரும் சட்டம் உதவுகிறது.   மாற்றுத்திறனாளிகளின் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 2016 சட்டத்தை மீறும் நபரை தண்டிக்கும் பிரிவினைக் கொண்டுள்ளது. அதாவது சட்டம் அல்லது விதிகள் அல்லது ஒழுங்குமுறை மீறலுக்கான தண்டனை. எந்த ஒரு நபரும், இந்த சட்ட ஷரத்துக்கள் எதனையும் அல்லது இதன் கீழான விதி எதனையும் முதல்தடவையாக மீறினால் ரூபாய் பத்தாயிரம் வரை அபராதமும்மீண்டும் மீறுபவர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரத்துக்கும் குறையாமல் ரூபாய் ஐந்து லட்சம் வரையிலான அபராதமும் செலுத்த நேரிடும்.
“89. Any person who contravenes any of the provisions of this Act, or of any rule made thereunder shall for first contravention be punishable with fine which may extend to ten thousand rupees and for any subsequent contravention with fine which shall not be less. than fifty thousand rupees but which may extend to five lakhs rupees.”
      இச்சட்டத்தின் 33, 34 ஆகிய பிரிவுகள் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்துப் பேசுகின்றன. 
      மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016 பிரிவு 33
உரிய அரசு
I. பிரிவு 34ன் கீழ் ஒதுக்கீட்டிற்கு தகுந்தாற்போல் வரையறுக்கப்பட்ட அளவு ஊனமுடைய நபர்களுக்கு நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிற்கான பதவிகளுக்கான பணியிடங்களை இனம் காணுதல்
II. வரையறுக்கப்பட்ட அளவு ஊனமுடைய நபர்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய வல்லுனர் குழு அமைத்து பதவிகளை இனம் காணுதல்
III. மூன்றாண்டுகளுக்கு மிகாத இடைவெளியில் இனம் காணப்பட்ட பதவிகள் குறித்து காலமுறை மறு சீராய்வு மேற்கொள்ளல்
பிரிவு 34
      இச்சட்டம் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியும் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை வழங்கியும் பின்வரும் வாசகங்களைப்பெற்றுள்ளது.
34.1. ஒவ்வொரு உரிய அரசும் ஒவ்வொரு அரசு நிறுவனத்திலும் வரையறுக்கப்பட்ட அளவு ஊனமுடைய நபர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டிய ஒவ்வொரு நிலைகளிலும் உள்ள மொத்த பதவிகளில் 4% குறையாமல் ஒதுக்கீடு செய்தல், ஒவ்வொரு குழு பதவிகளிலும் 1% கீழ்க்காணும் உட்கூறு (), () மற்றும் () வரையறுக்கப்பட்ட அளவு ஊனமுடைய நபர்களைக் கொண்டும் மற்றும் ஒரு விழுக்காடு உட்கூறு () மற்றும் () இல் வரையறுக்கப்பட்ட அளவு ஊனமுடைய நபர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.
அதாவது
பார்வையின்மை மற்றும் பார்வைக் குறைபாடு
. காதுகேளாமை மற்றும் செவித்திறன் குறைபாடு
மூளை முடக்குவாதம், தொழுநோய் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர், குள்ளத்தன்மை உடையவர், அமில வீச்சில் பாதிக்கப்பட்டோர், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியவை உள்ளிட்ட கை, கால் பாதிக்கப்பட்டோர்
புற உலகச் சிந்தனையற்ற நிலை, மனவளர்ச்சி குறைவு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு மற்றும் மனநலம் பாதிப்பு
காதுகேளாமை மற்றும் பார்வைத் திறன் குறைபாடு உள்ளிட்ட உட்கூறு () முதல் () வரை குறிப்பிட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட ஊனம் 
      இருந்தபோதிலும், இடஒதுக்கீட்டிற்கு உரிய அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவுறுத்தல்களின் பேரில், பதவி உயர்வு வழங்குதலில் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் உரிய அரசு தலைமை ஆணையர் அல்லது மாநில ஆணையர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து, எந்த ஒரு அரசு நிறுவனத்திலும் மேற்கொள்ளப்படும் பணியின் தன்மையினைக் கருத்தில் கொண்டு அறிவிக்கையின் மூலம், நிபந்தனைகள் ஏதேனும் இருப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, எந்த ஒரு அரசு நிறுவனத்திற்கும் இப்பிரிவின் வாசகங்களிலிருந்து விலக்களிக்கலாம்.
2. எந்த ஒரு நியமன ஆண்டிலும், எந்தக் காலியிடமும் பொருத்தமான, வரையறுக்கப்பட்ட அளவு ஊனமுடைய நபர்கள் இல்லை அல்லது பிற போதுமான காரணங்களினால் நிரப்பப்பட  முடியாதபோது, அந்தக் காலிப் பணியிடம் தொடர்ந்து பின்வரும் நியமன ஆண்டிற்கு முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். மேலும் அடுத்து வரும் நியமன ஆண்டிலும் வரையறுக்கப்பட்ட அளவு ஊனமுடைய நபர்கள் இல்லையென்றால் முதலில் ஐந்து பிரிவுகளுக்குள் பரிமாற்றம் செய்து நிரப்பப்பட வேண்டும். மேலும் அந்த வருடத்தில் அந்த பதவிக்கு எந்த ஊனமுற்ற நபரும் இல்லையென்றால் மட்டுமே வேலையளிப்பவர் ஊனமில்லாத நபரை நியமிக்கலாம். இருப்பினும், ஒரு நிறுவனத்தில் காலிப்பணியிடங்களில் அந்த நிலைக்கான நபர்களை நியமிக்க முடியவில்லையென்றால் இந்த ஐந்து பிரிவுகளிடையே பரிமாற்றம் செய்வதற்கு உரிய அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும்.
3. தேவையாகக் கருதும் போது உரிய அரசு அறிவிக்கையின் மூலம் வரையறுக்கப்பட்ட அளவு ஊனமுடைய நபர்களின் வேலை வாய்ப்பிற்கான உயர்ந்த பட்ச வயதைத் தளர்த்தலாம்.
இதன்படி நான்கு சதவித இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு ஆணை எண் 21. நாள் 30.05.2017 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வெளியிட்டு உறுதி செய்தது. ஆனால் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டினைப்பற்றி மாற்றுத்திறனாளிகளின் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 2016 சொல்லியிருந்தும், அரசாணையில் எந்தச் சொல்லும் இடம்பெறவில்லைமாறாக, அதே துறையால்  அரசாணை 51. நாள். 26.12.2017 அன்று வெளியிடப்பட்டது. அதில் அடையாளம் காணப்பட்ட தொகுதி C and D பணிகள் அனைத்தும் உகந்த பணிகளாக  அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது,  
1. நான்கு சதவீத இட ஒதுக்கீட்டிற்கு வரையறுக்கப்பட்ட தொகுதி C மற்றும் D பணிகள் வேலைவாய்ப்பில் அனைத்துப் பணிகளும் உகந்தவை.
2. மாற்றுத்திறனாளிகளுக்குரிய 4% இட ஒதுக்கீடு, இடமாறுதல், பணி நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றிற்குப் பொருந்தாது, பின்பற்றத் தேவையில்லைஅவ்வாறு செய்தால்இவர்களுக்கு இரண்டு  முறை முன்னுரிமை வழங்கியதாகிவிடும்
3. ஏதேனும் துறை, ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தொகுதி C மற்றும் D பணிகள் ஏதேனும் குறிப்பிட்ட பணி மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணி இல்லையென்று கருதினால், அப்பணிகளிலிருந்து விலக்கு கோரி அரசுக்கு விண்ணப்பிக்கவேண்டும். நிருவாகத்துறை மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரோடு பரிசீலித்து அரசு அப்பணியிலிருந்து விலக்காணை வெளியிடும்
“(i) the reservation of 4% vacancies earmarked for the differently abled persons will be applicable to all the posts in respect of ‘C’ and ‘D’ categories in employment.
(ii) the reservation of 4% vacancies for differently abled persons need not be made applicable in the case of recruitment by transfer/promotion as it would amount to giving double preference to these candidates.
(iii) If any department / establishment is of the view that any particular post in ‘C’ and ‘D' category is not suitable for differently abled persons, in such case, it may specifically request the Government for exemption. The administrative department in consultation with the State Commissioner for the Differently Abled and the Government shall issue appropriate orders. 
      மேலும் அரசாணை எண் 20 நாள் 20.06.2018. அதில், தொகுதி A மற்றும் B பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் உகந்த பணிகளாக அடையாளங்காணப்பட்ட பணிகளில் 4% இட ஒதுக்கீட்டினை அமல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது
“7. The Government after careful examination of the proposal of the State Commissioner for the Differently Abled, in consultation with all the concerned departments have decided to approve 229 posts under ‘A’ and ‘B’ categories and six posts already identified in Government orders 5 , 6 and 7 read above. Totally 235 posts under Group ‘A’ and ‘B’ categories are most suitable for differently abled persons. In respect of posts comes under other departments, boards and corporations will be identified and issue orders separately.
8. The Government also direct that 4% of the vacancies in direct recruitment for the identified posts in ‘A’ and ‘B’ Groups, where the rule of reservation is applicable for the SCs / STs / BCs and other communities, shall be reserved for the Differently Abled Persons. If only one post is available for recruitment in these categories, the usual procedure for recruitment will be followed. The Government has also directed that (i) The reservation of 4% vacancies earmarked for the differently abled persons will be applicable to identified posts in respect of ‘A’ and ‘B’ categories for direct recruitment posts only. 
      இதில் மிகவும் வருந்தத்தக்கது என்னவென்றால், 8.I இல் அடையாளங்காணப்பட்ட பணிகள் நேரடி நியமனங்களுக்கு மட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுஅதனால் தொகுதி D இல் பணியில்சேர்ந்த பார்வையற்றவர் தொகுதி B மற்றும் A பணிகளுக்கு பதவி உயர்வு அடையமுடியாத நிலையுள்ளதுஇதற்கு பதிலாக நேரடி நியமனங்களுக்கு மட்டும் என்ற சொல்லைத் தவிர்த்திருந்தால் பதவி உயர்வின்போது நமக்கு  இப்பட்டியல் உதவியாக இருந்திருக்கும்.
      மேலும்  மாற்றுத்திறனாளிகளுக்குரிய 4% இட ஒதுக்கீடு, இடமாறுதல் பணி நியமனம், பதவி  யர்வு ஆகியவற்றிற்கு பொருந்தாது, பின்பற்றத்தேவையில்லைஅவ்வாறு செய்தால்இவர்களுக்கு இரண்டு  முறை முன்னுரிமை வழங்கியதாகிவிடும் என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதால் நமக்கென்று பதவி உயர்வு இல்லை என்ற நிலை உள்ளது. சங்கம் இதில் தலையிட்டு நமக்கென்று பதவி உயர்வுக்குரிய ஆணையைப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிலிருந்து பெறவேண்டும்.  
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு:
      இட ஒதுக்கீட்டு முறை பதவி உயர்வின்போது உண்டா என்ற ஐயம் மாற்றுத்திறனாளிகளுக்கே எழக்கூடும். அந்த ஐயம் இயல்பானதுதான். ஏன் என்றால், தொகுதி D இல் இருந்து தொகுதி C இக்கு பதவி யர்வு வழங்கப்பட்டு வருகிறதுஆனால் தொகுதி C இல் இருந்து தொகுதி B மற்றும்  A விற்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை பணி நியமனத்தின்போது அடையாளம் காணப்பட்ட பணிகளுக்கு மட்டும் பணி நியமனம் செய்யப்படுகிறது.   இக்காரணத்தினால் பதவி உயர்வு அனைத்துப் பணிகளுக்கும் வழங்கப்படுவதில்லை.   இதுபோன்ற காரணத்தால்  காலந்தோறும் உரிமை மறுக்கப்பட்ட சமூகத்திற்கு இத்தகைய ஐயம் எழுவது புதிதில்லை. மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 பிரிவு 34ன் கீழ் பதவி உயர்வு கட்டாயம் வழங்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சங்கம் மேற்கொள்ளவேண்டும்.
நீதீமன்ற ஆணைகள்:
      பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி பல உயர்நீதிமன்றங்கள் ஆணையிட்டிருந்தாலும், உச்சநீதிமன்றத்தின் 08-10-2013 நாள் ஆணை பத்தி 49 பின்வறுமாறு குறிப்பிடுகிறதுவேலைவாய்ப்பு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கும் சமூக உள்ளடக்கத்திற்கும் வேண்டப்படுவதாகும்அவ்வாறு அவர்கள் வேலைவாய்ப்பற்று இருப்பதற்குக் காரணம் அவர்களின் ஊனம் அல்ல. அவர்களை உழைக்கும் க்தியாக மாற்றுவதற்கு தடையாக இருப்பவை சமூகமும் நடைமுறையும் ஆகும்.   இதன் விளைவாக பெரும்பான்மையான மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் வறுமையிலும்  பரிதாபத்தோடும் வாடுகின்றனர்அவர்கள் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் தன்னுடைய பங்களிப்பை வழங்கும் உரிமையிலிருந்து தடுக்கப்படுகின்றனர்.  
“49) Employment is a key factor in the empowerment and inclusion of people with disabilities. It is an alarming reality that the disabled people are out of job not because their disability comes in the way of their functioning rather it is social and practical barriers that prevent them from joining the workforce. As a result, many disabled people live in poverty and in deplorable  conditions. They are denied the right to make a_ useful contribution to their own lives and to the lives of their families and community.”
      மேலும் பத்தி ஐம்பது பின்வருமாறு குறிப்பிடுகிறது.   இந்திய அரசு, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இந்திய அரசியல்சாசன உரிமைகளையும், பன்னாட்டுப் பிரகடனங்களையும், பொதுவாக மனித உரிமைகளையும், சிறப்பாக மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் பாதுகாக்கவேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 1995-இல் இயற்றப்பட்டும் அதன் பலன் இன்றுவரை அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
“50) The Union of India, the State Governments as well as the Union Territories have a categorical obligation under the Constitution of India and under various International treaties relating to human rights in general and treaties for disabled persons in particular, to protect the rights of disabled persons. Even though the Act was enacted way back in 1995, the disabled people have failed to get required benefit until today.” 
      மேற்கண்ட ஆணைகளால் இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 16.1இல் மாற்றுத்திறனாளிகளுக்கும் குடிமக்களுக்குரிய வேலைவாய்ப்பு உரிமையுண்டு என்ற நிலையில், பின்வரும் உச்சநீதிமன்ற ஆணையால் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உண்டு என்ற கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.
கட்டாயப் பதவி உயர்வு ஆணை:
      உச்சநீதிமன்றத்தின் 14-01-2020 நாளைய ஆணையில்
SIDDARAJU Appellant(s)  VERSUS STATE OF KARNATAKA & ORS.(s)
என்ற வழக்கில் அரசுத் தரப்பு வாதத்தில் ஐம்பது சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது சிக்கல் ஏற்படுகிறதுஅதனால் மாற்றுத்திறனாளிகளுக்குப் பதவி உயர்வின்போது இட ஒதுக்கீட்டை வழங்க இயலாது என்றும், மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 1995 பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டைச் சொல்லவில்லை என்றும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 16 மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டினை வழங்கிடச் சொல்லவில்லை என்றும் வாதிட்டனர்.
 இதனை ஏற்காத நீதிபதிகள்,
ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு வேறு என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு அது பொருந்தாது என்றும் ஆணையிட்டுள்ளனர்அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 16.1.இல் இனிமேல் மாற்றுத் திறனாளிகளையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்பது கட்டாயமாகிறது. அதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் மற்றும் பதவி உயர்வில் மாநில மற்றும் மைய அரசுகள் இட ஒதுக்கீட்டினைக் கடைபிடிக்கவேண்டும்.  
“16. We do not agree with the _ respondent’s submission. Indra Sawhney ruling arose in the context of reservations in favour of backward classes of citizens falling within the sweep of Article 16(4).
21. The principle laid down in Indra Sawhney is applicable only when the State seeks to give preferential treatment in the matter of employment under the State to certain classes of citizens identified to be a backward class. Article 16(4) does not disable the State from _ providing differential treatment (reservations) to other classes of citizens under Article 16(1) if they otherwise deserve such treatment. However, for creating such preferential treatment under law, consistent with the mandate of Article 16(1), the   State cannot choose any one of the factors such as caste, religion, etc. mentioned in Article 16(1) as the basis. The basis for providing reservation for PWD is physical disability and not any of the criteria forbidden under Article 16(1). Therefore, the rule of no reservation in promotions as laid down in Indra Sawhney has clearly and normatively no application to PwD.”
முடிவு:
      1. பொதுவாக அரசின் பார்வையில் மாற்றுத்திறனாளிகள் என்றால், தனிக் கவனம் செலுத்தப்படும், சிறப்புரிமை வழங்கப்படும், முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கைகளில், ஆணைகளில் இடம்பெறுவதைப் பார்த்திருக்கிறோம்.   ஆனால், அரசே மாற்றுத்திறனாளிகளுக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கவேண்டாம் என்று அரசாணை எண் 51 நாள் 26.12.2017 மற்றும் அரசாணை எண் 20 நாள் 20.06.2018 குறிப்பிட்டிருக்கிறது என்பதை அறியமுடிகிறது
2. அரசாணை எண் ( 21 நாள் 30.05.2017 வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீட்டிலிருந்து 4% உயர்த்தி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 பிரிவு 34.1 இல் சொல்லப்பட்டுள்ள பதவி உயர்வு பற்றி கூறப்படவில்லை.
3. நீதிமன்றங்களின் ஆணைகளை அரசாணைகளாக வெளியிடுவதற்கு சங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும், நாமும் நமக்குத்தெரிந்த நீதிமன்ற ஆணைகளைக்கொண்டுவந்து சங்கத்திற்கு வழங்கவேண்டும்.
4. அரசியலமைப்புச்சட்டத்தில் இல்லாத நம் உரிமையை நீதிமன்றத்தில்  சட்டப்போராட்டத்தின்மூலம் பெறமுடியும்.   அதனால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 16.1 இன் படி நீதிமன்றத் தலையீட்டினால் நமக்கும் அரசுப்பணி மற்றும் பதவி உயர்வு கிடைப்பது உறுதி.     
5. சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று இருந்தாலும் நமக்குரிய சட்டங்களையும் விதிகளையும் நாம் அறிந்திருப்பதன் மூலம் நம் உரிமையை நிலைநாட்டிக்கொள்ளமுடியும்.

கட்டுரைக்கு உதவியவை:
1. இந்திய அரசியலமைப்புச்சட்டம்.
2. g.o. no.602 dated 14-8-1981 swnmp. Dopt..
3. g.o. no. 99. dated 1988 swnmp. Dopt..
4. RPD act 2016. government of india.
5. g.o. 21. dated 26-5-2017. wdad.dopt.
6. g.o. no. 51. dated 26-12-2017. wdad. Dopt..
7. g.o. no. 20. dated 26-6-2018. wdad. Dopt..
8. PWD act 1995. government of india.
9. Union of India & Anr. .... Appellant(s) Versus National Federation of the Blind & Ors. .... Respondent(s) supreme court judgment dated 8-10-2013.
10. SIDDARAJU Appellant(s) VERSUS STATE OF KARNATAKA & ORS. Respondent(s) supreme court judgment dated 14,15-1-2020.
11. Mukesh Kumar & Anr. .... Appellant(s) Versus The State of Uttarakhand & Ors. .... Respondent(s) supreme court judgment dated 7-2-2020.
12. ACT No. 30 OF 2017. An Act to amend the Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016.

(இக்கட்டுரை 15-03-2020 அன்று பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கம் (CSGAB) நடத்திய தேசிய அளவிலான கருத்தரங்கில் படிக்கப்பட்டது.

கட்டுரையாளர் கரூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றிவருகிறார்)
தொடர்புக்கு: sivakumarnanban@gmail.com 

2 கருத்துகள்: