கடந்த பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், ஊனமுற்றோர் பிரிவின் நலன் சார்ந்த எந்த ஒரு செய்தியும் குறிப்பாக கோவிட்-19 தொற்று மிகுந்த இந்தக் கால கட்டத்தில் அது தொடர்பான எந்த ஒரு கருத்தும் முன்வைக்கப் படாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. ஊனமுற்றோர் உரிமைகள் ஆர்வலர்கள் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளடக்கத்தை வலியுறுத்துவதாக இல்லை என்ற கருத்தைக் குறிப்பிடுவதோடு, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் ஊனமுற்றோர் என்ற சொல்லைத் தனது உரையில் ஒரு முறை கூட பயன்படுத்தவில்லை என்று கூறுகின்றனர்.
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016க்கான எந்த ஒரு செயல் திட்டமும் இதுவரை இல்லை இந்தியாவின் ஊனமுற்றோர் மற்றும் மனநலம் சார்ந்த எந்த ஒரு கருத்தும் நிதி அமைச்சரின் 2 மணி நேர அளவிலான நீண்ட உரையில் இடம்பெறவில்லை. இந்த நோய்த் தொற்று காலத்தில் அவர்களது துயர் துடைக்கும் உள்ளடக்கம் தேவைப்படுகிறது. ஆனால் ஊனமுற்றோர் மேம்பாட்டுத் துறைக்கான நிதி நிலை ஒதுக்கீடானது, சென்ற ஆண்டு 1325.39 கோடியாக இருந்தது; இந்த ஆண்டு 1171.77 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மனநலன் சேவைகளுக்கான தேவையை கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள போதிலும், தேசிய மனநல மறுவாழ்வு மையம் இதுவரை எந்த நிதி ஒதுக்கீடும் பெறவில்லை. ஊனமுற்றோருக்கான உரிமைகள் நலச் சட்டம் 2016 (RPD) அமலாக்கத்திற்கான முறையான செயல் திட்டம் (roadmap) எதுவும் வரையறுக்கப்படாத காரணத்தால், அங்கீகரிக்கப்பட வேண்டிய தேசிய ஊனமுற்றோர் மறுவாழ்வு மற்றும் ஊனமுற்றோர் கல்வி பல்கலைக்கழகத்தின் மசோதாவிற்கான நிதி ஒதுக்கீடு 0.01 கோடியாக மட்டுமே உள்ளது.
இந்தியப் பிரதமர் அவர்களால் தொடங்கப்பட்ட இந்திய அணுகல் (accessible India) பிரச்சாரத்திற்கென்று தனிப்பட்ட நிதியோ பணமோ ஒதுக்கீடு செய்யப் படவில்லை. மேலும் இதற்கான நிதி இந்திய ஊனமுற்றோர் நலச் சட்டத்தின் அமலாக்கத் திட்டத்திற்கென்று முன்பு 251 கோடியாகவும் தற்போது 209 கோடியாகவும் ஒதுக்கப்பட்ட பொது நிதியிலிருந்து பெறப்படுகிறது.
இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திற்கென தனிப்பட்ட நிதி எதுவும் ஒதுக்கப்படாததால், நாட்டின் 72வது குடியரசு தின விழா அணிவகுப்பின் போது, ஊனமுற்றோர் நலத்துறையின் சார்பில் நிகழ்த்தப்பட்ட சைகை மொழிக் காட்சி வெறும் உதட்டசைவை மையமாகக் கொண்டே வடிவமைக்கப் பட்டிருந்தது.
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரெஸ் பிப்ரவரி 1-2021)
தமிழாக்கம்: X. செலின்மேரி
தகவல்: பிரெயில் டைஜெஸ்ட் ஜனவரி-பிப்ரவரி 2021
தொடர்புக்கு: viralmozhiyar@gmail.com
நம்மை எங்கு அங்கீகரிக்க வேண்டுமோ அங்கு புறக்கணிப்பதும், தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்கிற இடங்களில் வம்படியாக சீண்டிப் பார்ப்பது அரசுகளுக்கு பொழுதுபோக்கு ஆகிவிட்டது போல. எல்லா தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யாமல் கார்ப்பரேட்டுகளின் அடிவருடும் மாநிலங்களில் தேர்தல்களை மனதில் வைத்தும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பது தான் இதுபோன்ற அவலங்களுக்கு மிக முக்கிய காரணம் என்பதை இந்த கட்டுரை நன்றாக விளக்கி சென்றிருக்கிறது. இதனை எளிய தமிழில் தெளிவாக மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார மொழிபெயர்ப்பாளர் திருமதி செலின்மெரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு