குறுங்கதை: பகல் கணவு - சு. பிரபாகரன்

 

      அந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு மெல்ல திறக்க அதிலிருந்து இறங்கினாள் மீரா. தனது வலப்புறமாக செல்லும் தெருவுக்குள் நுழைந்து நடக்கத் தொடங்கினாள். அவளது நடையே சொன்னது அவளது மகிழ்ச்சியை. இருக்காதா பின்னே! தன்னோடு கல்லூரியில் படித்த முகிலனைக் காதலித்தது. அதன் பிறகு வீட்டுக்குத் தெரிந்து அவர்கள் பச்சை கொடி காட்டியது. இது எல்லாமே ஒரு கனவு போல இருந்தது.

            ஆண் வீட்டாரும் பெண் வீட்டாரும் கூடியிருந்த சபையில் ஒருவர் எழுந்து ஜாதி பிரச்சனையைக் கிளப்ப. அட என்னையா ஜாதி, பசங்க சந்தோசம் தான முக்கியம் என்று முகிலனின் தந்தை கூறிவிட்டார். அடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடைப்பெற்றன. இதோ நிச்சயம் முடிந்து இன்றோடு இரண்டு மாதங்கள் கடந்து விட்டது.

            இன்று மீராவின் பிறந்தநாள். உன்னுடைய பிறந்தநாளுக்கு நம்ம வீட்டுக்கு வந்துரு இங்க கொண்டாடிக்கலாம் என்று அவளது அத்தை கூறி விட. அதை ஏற்று முகிலனின் வீட்டை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறாள் மீரா. முகிலனின் வீட்டை நெருங்கி. அழைப்பு மணியைத் தனது மெல்லிய விரல்களால் அழுத்த. ஜன்னல் வழியே இவளைப் பார்த்து விட்ட நிலா; ஒடோடி வந்து கதவைத் திறந்தாள். நிலா, முகிலனின் தங்கை. அண்ணி வாங்க வாங்க! என்று கூறி மீராவை வந்து அனைத்துக் கொண்டாள். அண்ணா அம்மா அப்பா எல்லோரும் வாங்க. அண்ணி வந்தாச்சி! என்று மகிழ்ச்சியாய் அறிவித்தாள். அடுத்த நிமிடம் அனைவரும் வந்து மீராவைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். இதில் முகிலன் தான், புத்தம் புது ஆடையில் அன்றலர்ந்த மலர் போல் நிற்கும் தன்னவளை விழியெடுக்காது பார்த்திருந்தான்.

      தனது முதுகில் சுலிரென்ற அடி விழுவதை உனர்ந்து யாருடா அது?” என்று பின்னே திரும்பினான். “எவ்வலவு நேரம்டா தூங்குவ? இப்படி பகலிலேயே தூங்கிட்டு ராத்திரி எங்கடா போர?” என்று முகிலனை எழுப்பிக் கொண்டிருந்தான் தோழன் விஷ்னு. அவனைத் திட்டிக்கொண்டே எழுந்தான் முகிலன். அப்போதுதான் புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் கனவு கண்டிருக்கிறோம் என்று.

      தனது கனவைப் பற்றி விஷ்னுவிடம் சொன்னான். அதைக் கேட்ட விஷ்னு அன்றைய செய்தித் தாளை முகிலனிடம் கொடுத்து; அதன் முதல் தலைப்புச் செய்தியைச் சுட்டிக் காட்டினான். முகிலன் அந்தத் தலையங்கத்தின் மீது கண்களைச் செலுத்த, ’கலப்புத் திருமணம் செய்துகொண்ட புதுமண ஜோடி வெட்டிக் கொலை’. இப்படி செய்தி வரவரைக்கும் நீ சொன்ன கனவு எப்பவுமே பகல் கனவு தான்என்றான்..

graphic கதை ஆசிரியர் சு. பிரபாகரன் அவர்களின் படம்
கதை ஆசிரியர் சு. பிரபாகரன்

(கதை ஆசிரியர் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பணி நாடுநர்).

தொடர்புக்கு: puprabakarans@gmail.com

 

2 கருத்துகள்:

  1. இவ்விருபத்தோராம் நூற்றாண்டிலும்கூட குணத்தைவிட குலமே மாட்சிமை பொருந்திய இடத்திலிருந்து ஆட்சிசெய்கிறதென்ற எதார்த்தத்தை /////// நெடுங்கதையை இச்சிறுகதை மூலம் படைத்திருக்கும் விதம் சிறப்பு. கதை தொடங்கிய விதம், கதாபாத்திரங்களின் பெயர் அனைத்தும் அருமை. ஆனால், கதை மிக விரைவாக முடிந்துவிட்டதுபோல் ஒரு எண்ணம். எனினும், தங்களது படைப்பிற்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு