கவிதை: கவிச்சாரல் - பார்வையற்றவன்


graphic ஓடுதளம்

பயிற்சியாளர் பத்துமுறை
ஓடச் சொல்கிறார் மைதானத்தைச் சுற்றி.
ஐந்துக்கடுத்து ஏழு;
ஏழுக்கடுத்து ஒன்பது
என ஓடும்
எல்லோருக்கும் மாறி விடுகிறது
என் வரிசை.
*********************

பந்துவீச்சைத் துவைத்துவிடலாம்;
கல வியூகத்தைத் தகர்த்துவிடலாம்;
முதன்மை துடுப்பாட்ட வீரர்களை
எளிதில் வீழ்த்தி விடலாம்;
இன்னும் பல யுக்திகளை வகுத்து
எதிரணியை முடக்கி விடலாம்.

ஒரு அணித் தலைவருக்கு எப்போதும்
பெரும் தலைவலியாய் இருப்பது,
தன் அணியில்
யாரைப் பதிலி ஆட்டக்காரராக
இருக்க வைப்பது என்பதுதான்.
*********************

30 நாட்கள் தொடர்ந்து
உடற்பயிற்சி செய்தால்,
ஓரளவு உள்ளடங்கும் வயிறு;
இரண்டு நாட்கள் பயிற்சி செய்வதை விட்டுவிட்டால்
குபீரென முன் தள்ளி நிற்கிறது!
தொப்பையும்_தோரணையும்
*********************

உங்களுக்குத் தெரியுமா?
மெக்ராத்தின் துல்லியமான பந்துவீச்சாலோ,
சச்சினின் கவனக்குறைவான துடுப்பாட்டத்தாலோ,
அவர் ஆட்டமிழக்கவில்லை!
எங்கள் வகுப்புத் தோழன் காமராஜ்,
எழுந்து நின்றதால்தான் சச்சின்
ஆட்டமிழந்தாராம்.
இப்போதும் சொல்கிறார் எங்கள் விடுதி காப்பாளர்.
*********************

தொடர்புக்கு: paarvaiyatravan@gmail.com

2 கருத்துகள்:

  1. கவிதை அருமை.
    விளையாட்டு உடல்நலத்திற்கு மிக சிறந்தது என்ற கருத்தை கவிதையில் குறிப்பிட்டுள்ளது அருமை

    பதிலளிநீக்கு
  2. உன்மைதான் தம்பி.
    தொப்பையும் தோரனையும். ஒருனால் விட்டாலும் முன்னாடி வந்து குபீர்னு குதிக்கிது.

    பதிலளிநீக்கு