கோடை மழை!
            அழுவும்
குழந்தையை அள்ளி அனைத்திடும் தாய் போல,
            கோடையை
போக்க கொட்டியது.
 
கொரோனா!
ஒருவரின் அலட்சியத்தால்
ஆக்சிஜன்!
                எங்கும் நிறைந்திருக்குமாம், ஆனால்
                கவலையில் கூப்பிடும்போது வராத கடவுள்
போல,
                எங்கும் நிறைந்திருந்து
                கொரோனா நோயாளியிடம் சேர தவறும்
உயிர்வளி.
 
உதயசூரியன்!
                நிந்திக்கும் பிள்ளையையும்,
                நித்தம் நினைந்திடும் பிள்ளையையும்
                சமமாக நேசிக்கும் தாய் போல,
                தினமும் காலம் தவறாமல்
உதித்திடுகிறான் அனைவருக்குமாய்.
தாய்!
            ஆண்டுக்கு ஒன்றாய் எங்கோ
ஒன்று மலர்ந்தாலும்
            தன் இலையிலும் புதிதாய் வேர்
பிடித்திடும்
            பிரம்ம கமலம் போல,
            தன் இறுதி மூச்சிலும் தன் குழந்தை
நலம் காப்பாள்.
 
மனைவி!
            எங்கோ தோன்றி, நம்மை சேர்ந்து
            அனைத்துமாய் விளங்கும் ஆற்று நீர் போல,
            நம்முடன் தம்மை கரைத்து நாளும்
காத்திடுவாள்.
அப்பா!
            தூரத்தில்
தெரியும், நெருங்கினால் விலகும்
            கானல் நீர் போல,
            கோபமாய் பாசத்தை வெளிப்படுத்துபவர்.
 
சகோதரன்!
            தட்டில் நாளும் தள்ளினாலும்,
            தினமும் சமையலுக்கு கதாநாயகனாம் கருவேப்பிலை போல,
            விருப்பு வெறுப்பு எதுவானாலும்
            நாளும் இனைந்தே பயணிக்கும் ஓர் உறவு.
 
தந்தை பெரியார்!
            கண்ணாடியில் இருக்கும்
அட்டையிலிருந்து
            சுங்க
கட்டனம் வசூலிக்கும்
            ரேடியோ கதிர் போல,
            மக்களிடமிருக்கும் தீண்டாமையை
நீக்கும் கதிர் வீச்சு.
கவிதை!
            மகரந்த சேர்க்கையில் முளைத்த
விதை போல,
            மனதில் என்றோ விழுந்த கற்பனையின்
விளைவு.
திரைவாசிப்பான்!
            நில்லாமல் பேசிடும், சமயத்தில் சினுங்கிடும்
            யாவுமாய் விளங்கிடும், விட்ட குறை தொட்ட குறையாய்
            ஏங்கவைத்திடும் வானொலி போல,
            அகப்பார்வையாளர் அன்றாடத்தில்
அங்கமாம்.
தமிழ் மொழி!
            முல் நடுவே புதைந்தாலும்
            சுவை தரும் பலா போல,
            என் கிருக்கள்களுக்கும் அர்த்தம்
தரும் வள்ளல்.
| கவிஞர் சுனில்குமார் | 
(கவிஞர்: பரோடா வங்கி, சேலம் கிளையின் உதவி மேலாளர்)
தொடர்புக்கு : sunilkumarbcaba@gmail.com
கவிஞர்.சுனில்குமார் அவர்களின் புதுக்கவிதை அனைவரின் நெஞ்சங்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது தொடரட்டும் உங்கள் படைப்புகள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குகவிஞர்.சுனில்குமார் அவர்களின் புதுக்கவிதை அனைவரின் நெஞ்சங்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது வாழ்த்துகள்
பதிலளிநீக்கு